ஃபர்தா

67 10 62
                                    

*ஏ.ஆா்.தாஹாவின்*
*சிந்தனை அரும்புகள்*
-----------------------------------------------------
*இந்த போரா (பர்தா) எங்கே*
*வாங்கினீர்கள்*......?
-----------------------------------------------------
*பெண்கள்.... அன்னிய ஆடவர்களின்*
பார்வைகளிலிருந்து தனது மேனியை
தற்காத்துக் கொள்ள, தன்னைப் பாது
காத்துக் கொள்ள, அணியப்படும்
*ஹிஜாப் எனும் பர்தா(போர)வின்*
இன்றைய நிலையென்ன.....?என்பதை
சற்று பார்ப்போம்.

*பர்தா அணியும் போது ஒரு பெண்,*
தனக்குள் ஒரு பாதுகாப்பை, தனது
உடல் அன்னியர் கண்ணில் இருந்து மறைக்கப்பட்டிருப்பதை உணர்கிறாள். என்னதான் உடை உடுத்தியிருந்தாலும்,
அதன் மேல் *ஹிஜாப்* பர்தா அணியும் போதுதான், மனதில் நிம்மதியும், ஒரு வகையான நிர்வாண உணர்வில்
இருந்தும் அவள் விடுபடுகிறாள். மேலும்...

*பர்தா அணிந்து வரும் பெண்களைக்* கண்டதும்,பார்வையைத் தாழ்த்திக்
கொண்டு செல்லும் நம்மவர்களும்,
பாய் வீட்டுப் பெண்கள் செல்கிறார்கள்
என்று மாற்று சமயப் பெருமக்களும் கூட, கண்ணியத்தோடு ஒதுங்கி அவளுக்கு
வழி விடுகின்ற, அந்த மரியாதையும்,
மதிப்பும், சமுதாயத்தில் கிடைக்கிறது. அப்படிப்பட்ட பர்தா கவசம், இன்று நமது
பெண்களிடம் மாட்டிக் கொண்டு படும்
பாடு சொல்லும் தரமன்று.

*முன்பெல்லாம் பர்தா ஆடம்பரமின்றி*
சாதாரணமாக இருக்கும். நமது உம்மா, கண்ணுமா,சகோதரிகள் மற்றும் நமது அன்றையப் பெண்கள், எட்டு முழ வேட்டி
யைப் போர்த்திக் கொண்டு செல்வார்கள். இன்னமும் சிலர் இன்றளவும் எட்டு முழ
வேட்டியை பர்தாவாக அணிவதை நாம்
பார்க்கிறோம்.

*தஞ்சை மாவட்டத்தில் பதினாறு முழ*
வேட்டியை போர்த்திக் கொண்டும்,
மீதியை கையில் வைத்துக் கொண்டும்
செல்வதை இன்றளவும் காணலாம்.
*எகிப்து நாட்டிலும் வெள்ளைக் கலர்*
*வேட்டிதான் பர்தாவாக பயன்டுத்தப்*
*பட்டது*. அந்த பாரம்பரியத்தில் வந்த
தொடர்பால், நமதூரிலும் வெள்ளை
பர்தாவாக இருந்திருக்கலாம்.இப்போ
மெல்ல மெல்ல கருப்புக் கலர் பர்தாக்கள் உலகெங்கும் பெண்கள் அணியத்
தொடங்கி, வெள்ளைக் கலர் பர்தாக்கள் அணிவது குறைந்து விட்டது.

அழகிய செயல்Where stories live. Discover now