நேரம் இரவு 12 மணியை நெருங்கி இருந்தது. உறக்கம் வராமல் கட்டிலில் புரண்டவள் Phone ஐ கையில் எடுத்தது Data on செய்தாள். BFF group இல் கவியும் ரம்யாவும், தீப்தியும் மொக்கை போட்டிருந்தார்கள். அது தவிர எல்லா Messages இலும் New year wishes தான். அவளும் தன் பங்கிற்கு எல்லோருக்கும் பொதுவாக ஒரு வாழ்த்தை தட்டி விட்டு, அவளின் School friend அக்ஷராவுக்கு போன் செய்தாள்.
ஹேய் அச்சு Happy new year!!
Happy new year darling!! இன்னும் தூங்கலயா?
தூக்கமே வரலப்பா
எனக்கும் தூக்கம் வரல டி, TV பாத்துட்டு இருக்கேன் ....
அக்ஷரா அவளின் நெருக்கமான தோழி. பள்ளித் தோழியை கல்லூரியில் பிரிந்து விட்டிருந்தாலும் இன்றும் அவள் எல்லா சுக துக்கங்களையும் பகிர்ந்து கொள்வது அவளிடம் தான். யாரிடமும் இலகுவில் ஒட்டாத அவளுக்கு 12 ம் வகுப்பில் புதுப் பள்ளியில் சந்தித்த அக்ஷராவை பழகத் தொடங்கிய சில நாட்களிலேயே பிடித்துப் போனது.
அரட்டை அடித்துவிட்டு காலை கட் செய்ய, அங்கே எதோ புது நம்பரில் இருந்து Message வந்திருந்தது. New year wish தான்.
"Thank you and wish you a happy new year too " என்று பதில் அனுப்பி விட்டு Whatsapp dp ஐ Check செய்தாள். அது அஜய். ரம்யா, தீப்தியின் Department friend. Canteen இல் அவர்களுடன் சில தடவை அவனை கண்டிருக்கிறாள். ஆனால் பேசியது இல்லை. அவள் பொதுவாகவே குறைவாக பேசும் ரகம் தான், அதிலும் ஆண்களில் அவளுக்கு இருந்தது primary school இல் இருந்த 2 நண்பர்கள் மட்டும் தான். அதற்கு பிறகு ஆண் நண்பர்கள் என்று யாருடனும் பழகியது கிடையாது. Campus இல் Classmates என சிலருடனும் தேவைக்கு மட்டுமே பேசுவாள் .
"Sanjana, it's Ajay. Ramya's classmate . " இவளின் வாழ்த்தை பார்த்து விட்டு அஜய் Reply செய்திருந்தான்.
தெரியும், Canteen ல அவங்களோட உங்கள பாத்திருக்கேன், How did you get my nmbr?
Whatssapp group லருந்து Save பண்ணேன். Sorry உங்களுக்கு புடிக்கலைனா Delete பண்ணிடறேன்.
"No, It's ok " அதற்குப் பின் அவன் ஏதோ Type செய்வது தெரிய, பேச்சை வளர்க்கத் தோன்றாமல் " it's too late Ajay. Good night " என்று Message ஐ தட்டிவிட்டாள். அவன் பக்கமிருந்தும் "Good night " என்று பதில் வர போனை Off செய்துவிட்டு கண்களை மூடிப் படுத்தாள்.
சஞ்சனா Second year bio technology student . அவள் வட்டத்தில் அவளுக்கென்று சில பேர். அவளே உருவாக்கிக் கொண்ட உலகத்தில் தனித்திருக்கும் சிறு பட்டாம் பூச்சி அவள். அவள் வாழ்க்கையை கதையாக பார்க்கலாமா?