நீ அவன Love பண்ணவே இல்லன்னு சொன்னதும் நானும் லூசு மாரி நம்பிருக்கேன் பாரு.
இல்ல அச்சு அப்போ ...
என்ன அப்போ ...? ஒனக்கு ஆரம்பத்துல இருந்தே அவன புடிச்சி தான் இருக்கு. நீ தான் Tube light மாரி அத புரிஞ்சிக்காம இருந்துருக்க. பாவம் அஜய் அவன எவ்ளோ அலைய வெச்சிருக்க!
அப்டி சொல்லாத அச்சு எனக்கு அழுக வருது
அழு தப்பில்ல. அஜய்கிட்ட போன் பண்ணி அழு, அவன் பாவப்பட்டு ஒன்ன ஏத்துக்கலாம்.
ஏத்துக்கலைனா? 😞
ஏத்துக்கலைனா உன் தலவிதி. நீ குடுத்து வெச்சது அவ்ளோ தான்னு மனச தேத்திக்கோ.
"அப்டி சொல்லாத அச்சு " அழுது விட்டாள் சஞ்சு.
ஹேய் ... அழாத Darling, அஜய் கண்டிப்பா புரிஞ்சிப்பான். நீ இப்பவே போன் பண்றியா?
இல்ல நான் வீட்டுக்கு போயே போன் பண்றேன்.
Ok வா, இப்போ சாப்டலாம்.
இல்ல வேணாம். நா வீட்டுக்கு போறேன்.
ஏய் வந்து முழுசா ஒரு மணி நேரம் கூட ஆகல.
பரவால்ல டி, நா வீட்டுக்கு போகணும்.
Ok ok திரும்ப அழுதுடாத, வா நானே வீட்ல Drop பண்றேன்.
வீட்டுக்கு வந்து விட்ட பின்னும் மனம் ஒருநிலைப் படாமல் இருந்தது. அம்மா Lunch எடுத்துக் கொண்டு Hospital போயிருந்தார். யாழினியை திவ்யா வீட்டில் விட்டுப் போயிருக்க வேண்டும். வீட்டில் அவளைத் தவிர யாருமில்லை. தன் அறைக்குப் போய் கதவை அடைத்து விட்டு கட்டிலில் சாய்ந்து கொண்டாள். போனில் Contact list இல் அஜய் Number ஐ எடுத்த பின்னும் Dial செய்ய தைரியம் வரவில்லை. நண்பர்களாக இருக்கலாம் என அவள் தான் அவனிடம் சொன்னாள். இப்போது எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு காதல் சொல்வது? அவன் முடியாது என்று சொல்லிவிட்டாள் அவள் நிலமை. திரும்பவும் அழுகை வந்தது அவளுக்கு.
அப்போது அம்மாவிடம் இருந்து போன் வந்தது. ராமுக்கு நினைவு திரும்பிவிட்டதாம். அம்மாவின் குரலிலேயே ஒரு பெரிய நிம்மதி தெரிந்தது. அப்படியே பூஜை அறைக்குப் போய் விளக்கேற்றி சாமி கும்பிட்டாள் சஞ்சு. அத்தோடு அஜய் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டு தன் அறைக்கு வந்தாள்.
இல்லாத தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அஜய்க்கு போன் செய்தாள். ஒரு தடவை முழுமையாய் Ring போய் Cut ஆனது. நெஞ்சுக்குள் பூகம்பம் வெடிக்க திரும்பவும் அழைத்தாள்.
கொஞ்சம் Busy ஆ இருக்கேன் சஞ்சு. அப்றம் பேசுறேன்.
அவள் பதிலை எதிர்பாராமலே காலை கட் செய்தான் அஜய். ஏமாற்றமாய் இருந்தது அவளுக்கு. லேசாக கண்ணீர் இமைகளை நனைக்க முகம் கழுவி விட்டு யாழினியையும் கூட்டிக் கொண்டு Hospital கிளம்பினாள்.
இரவு வீட்டுக்கு வந்து யாழினியை படுக்க வைத்துவிட்டு தானும் Fresh ஆகிவிட்டு வர நேரம் எட்டு மணி ஆகியிருந்தது. அப்போது தான் Call செய்தான் அஜய்.
Hello
Hello சஞ்சு, Sorry ஆபிஸ்ல கொஞ்சம் Problem, இன்னைக்கி காலைல இருந்து அப்பா கூட அலஞ்சிட்டு இருந்தேன். அதான் நீ Call பண்ணப்போ பேச முடியல.
ம்ம் ... பரவால்ல அஜய்.
"எதுக்கு call பண்ண? " அவன் கேட்கவும் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது அவளுக்கு. மூச்சு கூட விட முடியாமல், வார்த்தையும் வராமல் தவித்தாள்.
சஞ்சு ...
இல்ல அஜய், அது ... அக்கா சமாதானம் ஆகி மாமா கூட சேந்துட்டா. அத சொல்லலாம்னு தான் ...
ம்ம் ரொம்ப நல்ல விஷயம் சஞ்சு. But வீட்ல யாழினி இல்லாம ஒனக்கு Bore அடிக்கும் இல்ல?
"இல்ல அஜய், யாழு இன்னும் இங்க தான் இருக்கா. " ராமுக்கு Accident ஆனதிலிருந்து நடந்த எல்லாவற்றையும் சொன்னாள்.
ஹ்ம் Accident ஆனதுயும் ஒரு நல்ல விஷயம் நடந்துருக்கு சஞ்சு. இப்பவாவது அக்கா மனசு மாறிட்டாங்களே.
"ம்ம் ஆமா " எதை சொல்ல வேண்டுமென நினைத்தாலோ அதை தவிர எல்லாம் பேசிவிட்டு போனை வைத்தாள்.
ராம் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதால் இன்னும் இரண்டு நாட்களில் Discharge பண்ணிவிடலாம் என்று சொல்லிவிட அன்று காலையே ஹாஸ்டல் கிளம்பினாள் சஞ்சு. அஜய்யை சந்தித்து என்னவெல்லாம் பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என ஒத்திகை பார்த்துவிட்டு College கிளம்பிப் போனாள்.