5

1.8K 81 22
                                    


Ticket எடுத்துக் கொண்டு எல்லோரும் உள்ளே போக, திட்டமிட்டபடியே சஞ்சனாவின் பக்கத்தில் அமர்ந்தான் அஜய். Horror movie கண்களில் மிரட்சியுடன் அவள் படத்தை பார்க்க படம் முடியும் வரை அவளை ரசித்துக் கொண்டிருந்தான் அவன்.

படம் முடித்துவிட்டு எல்லோரும் வெளியே வர, "Night க்கு Bed கீழ பேய் இருக்கான்னு நல்லா Check பண்ணிட்டு தூங்குங்க Girls " எல்லோரையும் வழியனுப்பி விட்டு ரவியும் அஜய்யும் தமது வீட்டுக்கு கிளம்பினார்கள்.

இரவு சாப்பிட்டு விட்டு கட்டிலில் சாய்ந்தபடி சஞ்சனாவுக்கு Message Type செய்தான் அருண். திரும்ப ஏதோ ஒரு எண்ணத்தில் அதை Delete செய்து விட்டு படுத்தான். அவள் இப்பொழுது தான் அவனுடன் சகஜமாய் பேசத் தொடங்கியிருந்தாள் அதற்குள் அவளிடம் அதிகமாய் நெருக்கம் காட்டத் தயங்கினான் அஜய். என்ன தான் அவன் அவளை காதலித்தாலும் அவளுக்கும் அவனை முழுமையாய் பிடிக்க வேண்டும் , அவள் காதல் அவன் கட்டாயப் படுத்தியதாக இல்லாமல் முழு மனதாக அவள் விரும்பியதாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தான்.

அடுத்து வந்த நாட்களில் அஜய் சஞ்சனாவுடன் நேரம் செலவளிக்க அதிக வாய்ப்பு கிடைத்தது. வெவ்வேறு Department ஆக இருந்தாலும் அஜய், ரவி, சஞ்சனா, கவிதா, ரம்யா, தீப்தி என இவர்களின் கூட்டணி இன்னும் வலுப் பெற்றது.

Hey things லாம் Pack பண்ணிட்டீங்களா? அப்றம் Hostal வாசல்ல வந்து Wait பண்ணிட்டு இருக்க முடியாது -அஜய்

நாங்க Ready அஜய் நீங்க வந்ததும் கிளம்பிடலாம் -சஞ்சு

கவியின் அக்கா திருமணத்துக்குப் போக கிளம்பிக் கொண்டிருந்தார்கள். கவி ஏற்கனவே போயிருக்க மற்ற ஐவரும் இன்று போகிறார்கள். ரவியும் அஜய்யும் வந்ததும் எல்லோருமாக Railway station போய் ரயில் ஏறினார்கள்.

ஜன்னலோரமாய் சஞ்சனா அமர்ந்திருக்க அவளுக்கு நேர் எதிரே அஜய் அமர்ந்திருந்தான். ரம்யாவும் ரவியும் சீரியசாக அரட்டை அடித்துக் கொண்டிருக்க இரவு தூங்காமல் படம் பார்த்த தீப்தி இப்போது தூங்கியிருந்தாள்.

ஜன்னல் வழியே வெளியே பார்த்தபடி வந்தாள் சஞ்சனா. அவள் பார்க்காதபடி இடையிடையே அவளை ரசித்துக் கொண்டிருந்தான் அஜய். அவள் சட்டென்று திரும்ப அவளை பார்த்துக் கொண்டிருந்தவன் வசமாய் மாட்டிக் கொண்டான். ஆனால் ஒரு நிமிடம் திகைத்த சஞ்சு சுதாகரித்துக் கொண்டு அவன் பார்த்ததை கண்டு கொள்ளாதவள் போல இயல்பாக அவனுடன் பேசினாள்.

ஊர் போய் சேர எவ்ளோ Time ஆகும்? Reception க்கு Late ஆகாம போய்டலாமா?

"ம்ம் அது ... "அவள் பார்வையில் இதயம் படபடவென அடித்துக் கொள்ள அவளது பதட்டத்தில் வார்த்தை வராமல் தடுமாறி " போய்டலாம் ... Timeக்கு போயிடலாம் ஒருவாரு சொல்லி முடித்தான்.

ஸ்டேசன் போய் இறங்க அங்கே இவர்களுக்காக காத்திருந்தால் கவிதா. எல்லோரும் நேரே மண்டபத்துக்கு போய் Reception க்கு Ready ஆனார்கள்.

அடுத்த நாள் காலை முகூர்த்த நேரம் நெருங்க அப்போது தான் அஜய்யின் கண்ணில் பட்டாள் சஞ்சு. அதுவும் முதல் முறையாக அவளை புடவையில் பார்க்கிறான். Pink நிற பட்டுப் புடவை, அதற்கு Match ஆக வளையல், கழுத்தில் ஒரு செயின், இயல்பான அவளின் ஒப்பனையிலும் அழகாக இருந்தாள். இப்போதும் தன்னை மறந்து அஜய் அவளையே பார்த்துக் கொண்டிருக்க தீப்தியுடன் பேசிக் கொண்டிருந்தவள் தற்செயலாய் அவன் பக்கம் திரும்பினாள். அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தது புரிந்துவிட முகத்தில் மாற்றம் காட்டாமல் கஷ்டப்பட்டு சமாளித்தவள் அடுத்த பக்கம் திரும்பிக் கொண்டாள் .

திருமணம் முடிய அன்று மாலையே ஐவரும் ரயில் ஏறினார்கள். முன்புபோலவே அஜய் ஜன்னல் பக்கம் அமர அவன் எதிரே அமராமல் அடுத்த ஓரத்தில் அமர்ந்தாள் சஞ்சனா. அவள் செயலின் அர்த்தம் புரிந்தவன் அவள் முகம் பார்க்க அவளோ அவனை கண்டுகொள்ளாதவள் போல மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

அன்பே அன்பே ...Where stories live. Discover now