9

1.5K 75 7
                                    


Study holidays,  இரண்டு நாட்கள் வீட்டில் இருந்துவிட்டு வந்து Fresh ஆக படிக்கத் தொடங்கலாம் என்று Plan போட்டு எல்லோருமாய் வீட்டுக்கு கிளம்பினார்கள்.  வீட்டுக்கு போனதும் வந்தனாவின் பிரச்சினைக்கு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யோசித்தபடியே பஸ் ஏறினாள் சஞ்சனா.  

வீட்டுக்கு போய் சேர மணி ஐந்தை தாண்டியிருந்தது.  அம்மாவும் அப்பாவும் ஹாலில்  Coffee குடித்தபடி பேசிக் கொண்டிருந்தார்கள்.  யாழினி Cartoon channel பார்த்துக் கொண்டிருந்தாள்.  

வாம்மா ஏன் இவ்ளோ Late, phone உம் Switched off னு வந்தது.

Traffic பா,  Phone charge இல்லாம Off ஆகிடுச்சி.  

பதில் சொல்லிக் கொண்டே யாழினியை பார்க்க,

"வா சித்தி, டோரா பாக்கலாம் " மழலை குரலில் சொன்னாள் குழந்தை.

யாழு குட்டி பாருங்க,  சித்தி Fresh ஆகிட்டு வரேன் 

தன் அறைக்குப் போய் Fresh ஆகி உடை மாற்றிக் கொண்டு வந்தாள்.  

வந்தனா எங்க? 

"மேல Roomல இருக்கா " சற்றே தாழ்ந்த குரலில் சொன்னாள் அம்மா.

ஒனக்கு Coffee கொண்டு வரட்டுமா?

ம்ம் 

"நாம மாமாவ இங்க வந்து தங்க சொல்லுவோமா? " Coffee குடித்தபடி சஞ்சனா கேட்க அடுத்த இருவரும் கேள்வியாய் அவள் முகம் பார்த்தார்கள்.

எனக்கென்னவோ அவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சி இருக்கறதால தான் இன்னும் Problem solve ஆகாம இருக்குன்னு தோனுது.  Love marriage பண்ணிக்கிட்டவங்க தானே,  ரெண்டு பேரும் சேந்து இருந்தா கண்டிப்பா வந்தனா மனசு மாறும். 

"ம்ம் எப்டியாவது அவளுக்கு அறிவு வந்தா சரி.  நா நாளைக்கி மாப்பிள்ளையை சந்திச்சி பேசுறேன். " அப்பா விரக்தியுடன் சொன்னார்.


"சித்தி பத்து வரக்கும் எண்ணுவேன்,  நீங்க ரெண்டு பேரும் போய் ஒழிஞ்சிக்கணும் சரியா? "

கண்களை மூடி பத்து வரை எண்ணிவிட்டு கண்களை திறக்க அவளுக்கு முன்னால் கையால் முகத்தை பொத்தி சுவரில் ஒட்டியபடி நின்றார்கள் யாழினியும் தீபிகாவும் . தீபிகா பக்கத்து வீட்டுக் குழந்தை, யாழினியின் வயது தான் அவளுக்கும்.  எப்போதும் இருவரும் சேர்ந்து தான் விளையாடுவார்கள். 

சிரிப்பை கஷ்டப் பட்டு அடக்கிக் கொண்டு இருவரையும் காணாதது போல தேட இருவரும் ""ஹை " என்று கத்தினார்கள்.

அய்யோ யாழு குட்டியும் தீபி பாப்பாவும் இங்க தான் இருந்தீங்களா,  சித்தியால கண்டு புடிக்கவே முடியல. Ok இப்போ சித்தி ஒழிஞ்சிக்கிறேன்.  நீங்க ரெண்டு பேரும் தேடனும் சரியா?

சரி என உற்சாகமாய் தலை ஆட்டினார்கள் இருவரும். 

சரி கண்ண மூடிக்கங்க ரெண்டு பேரும், சித்தி ready சொன்னதும் என்ன தேடனும் Ok 

பிஞ்சுக் கைகளால் கண்களை மூடிய படி நின்றிருந்த குழந்தைகளை ரசித்தவள் அங்கே அருகில் இருந்த அறைக்குள் போய் கதவின் பின்னால் ஒழிந்து கொண்டாள்.  

Ready என்றதும் ஹாலில் அவளைக் காணாததால் அறைக்குள் வந்த குழந்தைகள் அறைக்குள் நுழைந்து அங்கேயும் அவளைக் காணாமல் விழித்தபடி நின்க "ஹை " என்று கதவின் பின்னாலிருந்து வெளியே வந்தாள் சஞ்சு.  

அவளை கண்டதும் துள்ளிக் குதித்து கை தட்டி சிரித்த குழந்தைகளுக்கு மாறி மாறி முத்தம் கொடுத்து விட்டு,  "இப்போ நீங்க ரெண்டு பேரும் ஒழிஞ்சிக்கிறீங்களா,  சித்தி தேடுறேன் " அவள் சொல்லி முடிப்பதற்குள் அவள் முன்பே கதவின் பின்னால் போய் நின்று கொண்டார்கள் இருவரும். 

இந்த முறை சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டவள், பொய்யாக அறை முழுக்க அவர்களை தேடத் தொடங்கினாள்.  


மாப்பிள்ள கிட்ட பேசினேன்,  மொதல்ல தயங்கினாரு,  அப்புறம் சம்மதிச்சிட்டாரு.  நாளைக்கி அவருக்கு வேல அதிகமாம்,  நாளன்னைக்கி வர்ரேன்னு சொன்னாரு 

இரவு உணவு வேளையில் அப்பா சொல்ல 

"வந்தனாக்கு தெரிய வேணாம்,  மாப்பிள வந்ததும் அவளே தெரிஞ்சிக்கட்டும். இல்லன்னா இன்னைக்கே கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண தொடங்கிடுவா " அம்மா யோசித்த படியே சொன்னாள்.

ஹ்ம் எப்டியும் மாமாவ பாத்ததும் பிரச்சின பண்ணுவா, அவர் வர்ர வரக்குமாவது வீடு அமைதியா இருக்கட்டும். 

அன்பே அன்பே ...Where stories live. Discover now