கதவை அடைத்துக் கொண்டு அறைக்குள்ளே தனித்திருந்து நீண்ட நேரம் ஆகியிருந்தது. மனம் இன்னும் அமைதி காணாமல் இருந்தாலும் எவ்வளவு நேரம் தான் இப்படியே இருப்பது? கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் வந்தனா. சஞ்சனாவின் அறைக்கதவு பாதி திறந்திருந்தது. அவள் Bag pack செய்து கொண்டிருந்தாள். அவளுடன் எதுவும் பேசத் தோன்றவில்லை. நான்கு படிகள் இறங்கி hall ஐ பார்க்க அங்கே யாழினி அவளுடைய Toys எல்லாம் பரப்பி வைத்து ராமுக்கு காட்டிக் கொண்டிருந்தாள். யாழினி முன்னால் மீண்டும் ஒரு சண்டை வேண்டாம், மீண்டும் திரும்பி அறைக்கு போனாள். கட்டிலின் பக்கத்தில் இருந்தது ராமின் Traveling bag, சஞ்சனா வைத்துவிட்டு போனது. அதை பார்க்க கோவமாய் வந்தது. ராம் வீட்டில் இருப்பதே பிடிக்கவில்லை, அவனுடன் ஒரு அறையில் வேறு இருக்க வேண்டுமா? Bag ஐ எடுத்து வெளியே அறை வாசலில் வைத்து விட்டு மீண்டும் கதவை மூடி விட்டு படுத்தாள்.அரை மணி நேரம் கடந்திருக்கும். சஞ்சனா கதவை தட்டினாள். " உள்ள வா சஞ்சு" கோபம் குறையாமல் பதிலளித்தாள் வந்தனா. கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவள்
" நா போய்ட்டு வரேன் "
ஹ்ம்
மாமா கூட சண்ட போடாத Please, At least யாழினி இருக்கும் போது மட்டுமாவது சண்ட போடாம இரு. morning நீ கத்தினதுலயே யாழினி ரொம்ப Disturb ஆகிட்டா.
பதில் ஏதும் சொல்லாமல் அவள் முகம் பார்த்தவள், கோபத்தில் ஆழமாய் ஒரு பெருமூச்சு விட்டாள். அதற்கு மேல் எதுவும் பேசாமல் வெளியே போனாள் சஞ்சனா.
பஸ் ஏறி அவளுக்கு பிடித்த ஜன்னல் சீட்டில் அமர்ந்து பாதையை வெறித்துக் கொண்டிருக்கும் போது அஜய்யிடம் இருந்து போன் வந்தது.
ஹலோ சொல்லு அஜய்
கிளம்பிட்டியா சஞ்சு?
ம்ம், இப்ப தான் பஸ் ஏறினேன்.
ஹ்ம் Ok, இன்னைக்கும் வரலைனா நானே ஊருக்கு வந்து ஒன்ன தூக்கிட்டு வரலாம்னு தான் பாத்தேன், நல்ல வேள நீயே கெளம்பிட்ட ...