அஜய்யை பார்த்ததும் மிரண்டு போய் எழுந்து நின்றாள் சஞ்சனா.
ஏன் நேத்து Party க்கு வரல?
ம்.. அதான் சொன்னேனே ... தலவலி
பொய் சொல்லாத சஞ்சு . நீ இப்பெல்லாம் என்ன Avoid பண்ற. நேத்து Party க்கு நீ வேணும்னு தான் வரல.
"அப்டி எதும் ... இல்ல அஜய். " பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாள் அவள். அவள் தவிப்பை பார்த்ததும் அதற்கு மேல் கோபப்பட முடியாமல் ஒரு பெருமூச்சு விட்டு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவன்,
நல்லா தானே பேசிட்டு இருந்த? Leave முடிஞ்சி வந்ததுல இருந்து நீ சரியில்ல. எதாவது Problem னா சொல்லு, இல்ல நா எதாவது தப்பு பண்ணிருந்தா கூட சொல்லு ,திருத்திக்கிறேன். ஆனா இப்டி வெலகி போகாத சஞ்சு ரொம்ப கஷ்டமா இருக்கு.
கண்கள் கலங்கி விட்டது அவளுக்கு. வார்த்தை வராமல் தொண்டையில் அடைத்துக் கொண்டு வலித்தது.அவனுக்கு பதில் சொல்லவும் முடியாமல் அவனை நிமிர்ந்து பார்க்கவும் முடியாமல் தவித்தாள்.
அவள் பதிலுக்காய் காத்திருந்தவன் அவள் பக்கம் மௌனம் மட்டுமே பதிலாய் வர சற்றே நிதானித்து "I love you சஞ்சு " என்றான்.
அவன் சொன்னதில் அவள் உடலெல்லாம் நடுங்க இப்போதும் பதிலேதும் சொல்லாமல் அவனைப் பார்த்தாள். அவள் நிலையை புரிந்து கொண்ட அஜய் அப்போது எந்த பதிலையும் அவளிடமிருந்து எதிர்பார்க்காமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.
அன்று இரவு முழுக்க உறக்கம் வராமல் தவித்தாள் சஞ்சனா. எது நடக்கக் கூடாது என்று நினைத்தாளோ, எதற்காக அவனை விட்டு விலகியிருக்க நினைத்தாளோ அது நடந்துவிட்டது. ஒரு பக்கம் மனதில் இனம் புரியாத தவிப்பு, இன்னொரு பக்கம் அஜய் மனதையும் காயப் படுத்தி விட்டோமே என்ற வேதனை அழுகை வரவில்லை அவளுக்கு , ஆனால் நெஞ்சுக்குள் ஏதோ அடைத்துக் கொண்டது போலிருந்தது.
அஜய்யிடம் என்ன பதில் சொல்வது எப்படி பேசுவது என்று மனதிற்குள்ளே ஒத்திகை பார்த்துவிட்டு அடுத்த நாள் கல்லூரிக்கு போனாள்.
நேற்று அவனுடன் பேசிய அதே இடத்தில் அவனுக்காய் காத்திருந்தவள் தூரத்தில் அவனைப் பார்த்ததும் எழுந்து நின்றாள். "Nervous ஆகாம பேசு சஞ்சு, சொதப்பிடாத " தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருக்க அவள் அருகில் வந்தான் அவன். அஜய் எதுவும் பேசாமல் அவள் முகம் பார்க்க இதயம் பயங்கரமாய் அடித்துக் கொண்டது அவளுக்கு. ஆழமாய் ஒரு மூச்சு விட்டு தன்னை அமைதிப் படுத்திக் கொண்டவள் இரவு முழுக்க மனப்பாடம் செய்ததை அப்படியே அவனிடம் ஒப்புவித்தாள்.
I'm sorry அஜய், இந்த College love ல எனக்கு சுத்தமா நம்பிக்க இல்ல .நீ எனக்கு நல்ல Friend, எனக்கு ஒன்ன ரொம்ப புடிக்கும். But அதுக்காக என உன் மேல Love லாம் இல்ல . உனக்கு என்கூட Friend ஆ மட்டும் பழக முடியாதுன்னா நாம இனிமே பேசிக்கவே வேணாம். வெலகியே இருந்துடுவோம்.
அவன் கண்களை சந்திக்காமலே பேசி முடித்தாள் சஞ்சனா. எல்லாம் சொல்லிவிட்டு சிரமப்பட்டு அவனை நிமிர்ந்து பார்க்க உணர்ச்சி துடைத்த முகத்துடன் நின்றிருந்தான் அஜய். அழுது விடுவோமோ என்று பயமாய் இருந்தது அவளுக்கு. அவன் கண்களை எதிர்கொள்ளும் சக்தி இல்லாமல் மீண்டும் தலை குனிந்தவள்,
என்னால, நான் உன் கூட பழகின விதத்தால தான் உன் மனசுல இந்த எண்ணம் வந்திருந்தா I'm very sorry அஜய். நா உன்ன Hurt பண்ணணும்னு நெனக்கல But அதுக்காக உன்ன Love பண்ண முடியாது.
அவனை நிமிர்ந்து பார்க்காமல் சொல்லிவிட்டு அவன் கண்களை சந்திக்காமலே அங்கிருந்து போனாள் அவள். அவள் சொன்னதை நம்ப முடியாமல் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான் அஜய்.
நேராக Washroom போனவள் யாருக்கும் தெரியாமல் அழுது தீர்த்தாள். அஜய்யை காயப்படுத்தி விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி ஏதோ தவறு செய்து விட்டதை போல் உறுத்தியது.
"நீ பண்ணது தான் Correct சஞ்சு, கொஞ்ச நாள்ள எல்லாம் பழையபடி ஆகிடும். சும்மா மனச கஷ்டப் படுத்திக்காத " தனக்குத் தானே சொல்லிக் கொண்டாலும் அஜய் இனிமேல் பேசவே மாட்டானா என்று ஒருபக்கம் ஏக்கமாய் இருந்தது.
அதற்கு மேல் அங்கே இருக்கத் தோன்றாமல் கவியிடம் ஏதோ வாய்க்கு வந்த காரணத்தை சொல்லிவிட்டு ஹாஸ்டல் கிளம்பினாள் சஞ்சு. ஹாஸ்டல் போன பின்னும் மனம் ஒருமாதிரி பாரமாகவே இருக்க குளியலறைக்குப் போய் நீண்ட நேரம் Shower இல் நின்று விட்டு வந்து கட்டிலில் சாய்ந்தாள். Ear phone மாட்டிக் கொண்டு கண்களை மூடிக் கொள்ள அங்கே ஏக்கம் கலந்த பார்வையுடன் கண்முன் வந்து நின்றான் அஜய்.