Exam எழுதிவிட்டு வெளியே வந்த போது அப்பாடா என்றிருந்தது. இன்றுடன் எல்லா பரிட்சைகளும் முடிகிறது. ஹாஸ்டல் போய் Bag pack பண்ணிவிட்டு வீட்டுக்கு கிளம்ப வேண்டியது தான்.
"என்ன கவி, போலாமா? "
கொஞ்சம் இரு சஞ்சு, தீப்தி அஜய் கிட்ட இருந்து ஒரு Book வாங்கிட்டு வர சொன்னா. அஜய் வந்ததும் வாங்கிட்டு போயிடலாம்.
ம்ம் Ok
அப்போது அங்கு வந்து சேர்ந்தான் அஜய்.
Hi - அஜய்
Hi அஜய் - கவிதா
"இந்தா " புத்தகத்தை கவியிடம் நீட்டியவன் " Exam லாம் முடிஞ்சி ரெண்டு பேரும் Free ஆகிட்டீங்கல்ல, இப்போ ஹாஸ்டல் போய் போத்திட்டு படுக்க வேண்டியது தான் .
ஹ்ம் அத தான் பண்ண போறேன். But madam தான் இன்னைக்கே வீட்டுக்கு போறாங்க -கவிதா.
அவள் சொன்னதும் கேள்வியாய் சஞ்சுவின் பக்கம் திரும்பி அவளை பார்த்தான் அஜய்.
வீட்டுக்கு போறியா? அப்போ நம்ம Plan?
இல்ல அஜய் நா வரல.
Hey என்ன சொல்ற?
உங்களுக்கு Exam முடிய இன்னும் 5 days இருக்கு. அது வரக்கும் வெட்டியா ஹாஸ்டல்ல இருக்க முடியாது அஜய். எனக்கு வீட்டுக்கு போகணும் போல இருக்கு.
அவள் மனதை மாற்ற முடியாது என்று தெரிந்ததால் அவளை வற்புறுத்தவில்லை. ஆனால் அவள் இல்லாமல் சுற்றுலா போவதை நினைக்க என்னவோ போலிருந்தது.
அன்று மாலையே வீட்டுக்கு கிளம்பினாள் சஞ்சு. தீப்தி, ரம்யா மற்றும் கவி மூவரும் நன்றாக திட்டி வழியனுப்பி வைத்தார்கள்.
பஸ்ஸில் வழக்கம் போல ஜன்னல் சீட்டில் அமர்ந்து வேடிக்கை பார்க்க முடியவில்லை. தான் கொடைக்கானல் போக வரவில்லை என்றதும் அஜய்யின் முகத்தில் இருந்த வருத்தம் அவளை என்னவோ செய்தது. ஆனால் போகக்கூடாது என்று முடிவெடுத்ததே அவனால் தானே! அவளுக்கு அவன் மேலிருந்த ஈர்ப்பு அவள் மறுக்க முடியாதது, அவனும் பார்வையிலும் செயல்களிலும் அவன் மனதை சொல்லிக் கொண்டு தான் இருக்கிறான். ஆனால் அதை ஏனோ அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வந்தனாவின் செயலால் காதலின் மேலிருந்த மரியாதை, நம்பிக்கை எல்லாம் எப்போதோ இல்லாமல் போயிருந்தது. ஆனால் அஜய்யிடம் இருந்து முழுமையாய் விலகவும் அவளால் முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் மனதினுள் குழம்பிக் கொண்டிருந்தாள்.