29

2.1K 129 196
                                    

என்னங்க இது... ஒரு மாமக்கு தர மரியாதையா இது...இந்த ரெக்கார்ட அவுங்க கேட்டுட்டு எப்படி வருத்த படுறாங்கனு தெரியுமா?? "அவனுவோ அப்படி தான் இருப்பானுவோ"னா என்ன அர்த்தம்ல சொல்லுறாங்க என சீதா கைப்பேசியில் கேட்க...

இல்லை...அப்படிலாம் இல்லை...அவன் நார்மலா அப்படி தான் பேசுவான்...அதான் அவனோட பழக்கம் என அமுதா கூறவும் எரிச்சலுற்று இதுக்கு மேலே என்னத்தை பேசுறது என நாளு வார்த்தை நார்மலாக பேசி விட்டு கைப்பேசியை அனைத்தார் சீதா...

சிறிது நேரத்தில் அக்ஸர்...ராம்க்கு கால் செய்து வாழ்த்து சொல்லியவன்... சீதாவிர்க்கும் வாழ்த்து சொல்லி தாமதமாக வாழ்த்து கூறியதர்க்கு மன்னிப்பும் கேட்டான்...

எல்லோரும் ஒரு அளவு நிம்மதி அடைய மாலை பொழுது வந்தது... அப்பா..நான் ஃப்ரெண்ட்ஸ்  கூட பீச்க்கு போறேன் என கூறி அபி தயாராகி வர சரியாக அக்ஸரிடமிருந்து அழைப்பு வந்தது...

அம்மா... அப்பாவும் அருகில் இருக்கும் நேரம் என்றும் இல்லாமல் இன்று அக்ஸரிடமிருந்து  அழைப்பு வர கைப்பேசியையும் பெத்தவங்களையும் பார்த்து பேந்த பேந்த விழித்தாள்...

என்னாச்சி மா...ஃபோன் அடிச்சிட்டு இருக்கு...எடுக்க மாட்டியா என ராம் கேட்க... அது...அ..து...ப்பா என தட்டுதடுமாரி பேச... அக்ஸர் கால் பன்னும் போது எப்படி நம்ம முன்னாடி பேசுவா என சீதா... ராமிடம் கூற திருட்டு முழி முழித்த சீதாவை பார்த்து சிரித்தவர் எழுந்து சென்றார்...

நான் எதையும் கவனிக்க மாட்டேன் என சீதா கண்டும் காணாமல் இருக்க... அக்ஸரின் அழைப்பை ஏற்றவள் மிகவும் மெதுவாக பேச ஆரம்பித்தால்..

அக்ஸர்: ஹலோ

அபி: ஹாய்..

அக்ஸர்: தீபாவளி வாழ்த்துக்கள்

அபி: சேம் டூ யூ..

அக்ஸர்: என்ன...ரொம்ப அமைதியா பேசுறீங்க...

அபி: அப்படிலாம் இல்லை...

அக்ஸர்: இல்லையே....பக்கத்துல மாமா, அத்தை இருக்காங்களோ...

மனசெல்லாம் (முடிவுற்றது)Where stories live. Discover now