43

2.3K 146 84
                                    

காலையில் எழுந்ததிலிருந்தே அபி அர்ஷாவின் முகத்தை பார்ப்பதும், அர்ஷா பார்க்கும் போது அபி திரும்பி கொள்வதும் இப்படியே இருக்க,.."மகாராணி.. இப்ப தான் இறங்கி வந்திக்குறாங்க போலே.. இப்ப நாமளா பேசுனோம்னா முறுக்கிக்குவாங்க" என நினைத்து மனதிர்க்குள் சிரித்தவன்.. அவளை கண்டுக்காமள் சென்றான்..

அர்ஷா,. அவனின் ஆடையை எடுத்து இஸ்திரி போட ஆரம்பிக்க.. அதை பார்த்த அபி அர்ஷாவை நெருங்கி.. அர்ஷாவின் முறைப்பை பார்த்தவள்,. "ரொம்ப தான் ஓவரா பன்றான்.. பாவம், லேட் ஆகுதே.. அயர்ன் பன்னி குடுக்கலாம்னு நினைச்சா.. என்னையவே முறைக்கிறான்.. திமிரு பிடிச்சவன்" என மனதில் நினைத்து புலம்பியபடி தேநீரை எடுத்து வந்தவள் அவனிடம் நீட்ட,.. அர்ஷாவோ, அவளை கண்டுகொள்ளாதவாறு கோப்பையை எடுத்து கொண்டு டையை சரி செய்தவாரு வெளியே செல்ல.. அவன் போறதையே பார்த்து முறைத்து கொண்டிருந்தாள் அபி..

அவனோ,.. தன் காலணியை அணிந்து கொண்டிருக்க.. இது வரை எதிர் வீட்டில் அமர்ந்து கண்காணித்து கொண்டிருந்த ஷிவானி,.

அர்ஷா லிஃப்டிர்க்குள் நுழையவும்.. அப்பொழுது தான் வந்ததை போல ஷிவானி வேகமாக லிஃப்டிர்க்குள் நுழைய.. அர்ஷாவை மோதிக்கொண்டாள்..

கையை தேய்த்தவாரு ஷிவானியை பார்க்க.. "சாரி.. சாரி.." என தடுமாறி "சார்ர்ர்" என இழுக்கவும்... "இட்ஸ் ஓகே.. சார் லாம் வேணாம்.. கால் மீ அர்ஷா" என சிரிக்க.. "ஹான்.. அது" என இழுத்தவள்.. "இல்லை அர்ஷா.. காலேஜ்க்கு டைம் ஆச்சி" என இழுக்க.. இரு புருவங்களையும் சுருக்கி அர்ஷா கூர்ந்து  பார்க்கவும்.. "லிஃப்ட்ல போகனும்" என ஷிவானி கூற..  "அதுக்கு என்ன... எனக்கும் ஆஃபிஸ் க்கு டைம் ஆச்சி.. அதான் இவ்வளவு இடமிர்க்குல்ல" என கூறவும்.. இவளும் சிரித்து தலையசைத்தவாரு லிஃப்டிர்க்குள் செல்ல.. அர்ஷாவும் சென்று பொத்தானை தட்டினான்..

இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த அபி,. "லிஃப்ட் க்குள்ள என்ன நடக்கும்?? அந்த ஷிவானி  லவ்வ சொல்லிருவாலோ?? அப்டி சொன்னா அர்ஷா என்ன பன்னுவான்?? இல்லை.. அர்ஷா ஓகே சொல்ல மாட்டான்.. அவன் தான் என்னை லவ் பன்றானே.. அப்புறம் எப்படி?? ஆனா, நேத்து டிவோர்ஸ் பன்றேனு சொன்னான்லே.. அதுக்காக ஷிவானியோட லவ்வ அக்ஸப்ட் பன்னிருப்பானோ?? அப்ப என் அர்ஷூ என்னை விட்டு போயிருவானோ?? நோ.. போக கூடாது.. அவன் இல்லாம என்னால இருக்க முடியாது.. அர்ஷா ஷிவானி  லவ்வ அக்ஸப்ட் பன்னிக்கிட்டானா இல்லையானு எப்படி தெரிஞ்சிக்கிறது?? ஹான்.. ஐடியா.. மொட்ட மாடிக்கு போய் பார்க்கலாம்.. அவுங்க சிரிச்சி பேசிட்டு போறாங்களா?? சாதாரணமா போறாங்களானு??" என பலவாறு யோசித்தவள்.. வேகமாக மாடியில் ஏறி நின்று பார்த்தாள்..

மனசெல்லாம் (முடிவுற்றது)Where stories live. Discover now