பயணம் 1

11.6K 136 9
                                    

எனது முதல் படைப்பு "எனது சூரியன் நீயடி....உனது நிலவு நானடி.......".இரண்டு வேறுபட்ட தன்மை கொண்ட நெஞ்சங்களுக்கு இடையே மலரும் காதல் மற்றும் அவர்களின் வாழ்வியல் பயணம் தான் இக்கதை.இரண்டு உள்ளங்களின் செயல்பாடுகள் வேறுபட்டாலும் ஆழ்மனதின் பிரதிபலிப்புகள் ஒன்று தான்.

தமிழ் மொழியின் அடிமை என்ற பெருமையோடு எனது எழுத்துகளை பதிவிடுகிறேன்.எனது குறைகளை சுட்டிக்காட்டுங்கள் திருத்தி கொள்கிறேன்....

அன்று காலை 6.00 மணி சூரியன் தன் பொன் ஒளியை வீசி அழகாய் புன்னகைத்தான்.மரங்களும் செடிகளும் தம் இலைகளை அசைத்து பதில் புன்னகை வீசின.
அது கிராமமும் நகரமும் கலந்த ஊர்.சுருக்கமாக சொன்னால் வசந்தமான வாழ்வுக்கு ஏற்ற சொர்க்கம்.மனிதர்கள் உடன் சேர்ந்து பாடும் குயிலும்,கொஞ்சும் கிளியும் மற்றும் பல சக உயிரினங்களும் சேர்ந்து வாழ்ந்தன.(அனைத்தையும் சொன்னால் உங்களுக்கு கதை படிக்க அழுத்து விடும்).அங்கு வீடுகளும் தேவை கேற்ப அளவாய் இருந்தது.போக்கு வரத்துக்கு வசதியாய் பேருந்துகளும் சில அத்தியாவசிய கடைகளும் இருந்தன.
அந்த கிராமத்தில் அழகான ஓர் பாரம்பரிய ஓட்டு வீட்டு.அரண்மனை போல் இல்லை என்றாலும் அங்கு வசிக்கும் மனிதர்கள் ராஜாகள்,ராணிகள் தான் உருவத்தால் அல்ல குணத்தால் .(பின்ன heroine வசிக்கற வீடாச்சே).ஆர்பாட்டம் இல்லாத பெரிய குடும்பம்.தாத்தா,பாட்டி,பெரியப்பா,பெரியம்மா,சித்தபா,சித்தி,இரண்டு பேரன்கள்,ஓரு செல்ல பேத்தி.அந்த வீட்டோட இளவரசி,ஹிட்லர்,செல்ல வில்லி,தங்கமகள் அவதாங்க.அவ பேரு சூரியப்பிரபா செல்லமா சூரியா.தாத்தா ராஜவேல் ஐயாவுக்கு இரண்டு பசங்க.அவங்க குடும்ப தொழில் விவசாயம்.பேரன்கள் இரண்டு பேரும் கூட விவசாயத்த பத்தி படிச்சுட்டு குடும்பத்துக்கு உதவியா இருக்காங்க.தொடர் ஐந்து முறை மாநில அரசோட சிறந்த விவசாயி காண விருத இவங்க குடும்பம் தான் வாங்கிருக்கு.முதல் மகன் முருகன் அவங்க மனைவி வள்ளி.முருகன் வள்ளிக்கு இரண்டு வாலு பசங்க குகன்,யுகன்.பேருக்கு எத்த மாதிரி பாசக்கார பசங்க.அதுவும் அவங்க செல்ல தங்கச்சி மேல ரொம்ப பாசம்.சூர்யா ராஜவேல் தாத்தாவோட இரண்டாவது பையன் மாணிக்கத்தோட ஓரே பொன்னு.மாணிக்கத்தோட மனைவி சாந்தவி ரொம்ப பொருமைசாலி.இவங்க எல்லாரும் தாத்தா உட்பட பயப்படற ஓரே ஆள் பாட்டி செல்லம்மாள்.அவங்களுக்கு அன்பை மிரட்டலா வெளிபடுத்திதான் பழக்கம்.ஆனா தங்கமான மனசு.நம்ம கதாநாயகி அப்படியே பாட்டி மாதிரி.அழகான மனசு, சாதிக்க துடிக்கும் கண்ணும்,ஒளி வீசும் தோற்றம்,காலை சூரியன் மாதிரி இதமாவும் பேசுவா,வரம்பு மிறினா அக்னி நட்சத்திரம் போல சுட்டெரிப்பா.பெண்மையின் புதுமை சூர்யா.நல்ல ஆளுமை திறன் அளவிட முடியாத மனிதாபிமானம்.படிப்புல படு சுட்டி.ஆனா கொஞ்சம் கோவகாரி மனசுல பட்டத பேசிறுவா.பாட்டி சொல்லை தட்டாத பிள்ளை அதனால நகரத்துல கல்லூரி படிக்க இடம் கிடைத்தும் போகால.பக்கதுல இருக்கற கல்லூரிலயே சேர்ந்து இளங்கலை வணிகவியல் படிச்சுட்டு அங்கயே முதுகலை முடுச்சுட்டு இப்போ பட்டய படிப்புக்கு விண்ணபிச்சுருக்கா.மத்த பெண்கள் போல அழகு மேல அர்வம் இல்லாதவ.இயற்கை யாவே அவ அழகு தான் வெளி தோற்றத்தில் மட்டும் இல்லாம மனசும் தான்.முக்கியம் ஆ சூரியாவுக்கு காதல் பிடிக்காது.இன்றைய காலத்து ஒரு சில யுவயுவதிகள் செய்யற செயலால காதல்னா பிடிக்காமையே போய்ருச்சு.மனசு இரண்டு சங்கமம் ஆகி இரண்டு குடும்பத்துக் கிடையில் பந்தம் ஏற்படறது தான் திருமணம்னு நினைச்சா.
சூர்யா பத்தி பேசுனா பேசிடே போலாம் இப்போதைக்கு இதோட முடிகறேன்.தவறு இருப்பின் மன்னிக்கவும்.

பயணங்கள் தொடரும்....

எனது சூரியன் நீயடி.....உனது நிலவு நானடி......Where stories live. Discover now