...........🌹🌺🌹.......................🌻🌷🌸........
கண்கள் காதல் மொழி பேச வரிகளை தேடி அழைந்த வேளையில் மனமோ ஆயிரம் காதல் வசனங்களையும் கனவுகளையும் தேக்கி வைத்து கொண்டு எப்போது அவை அரங்கேற்றம் ஆகும் என்று காத்து கிடந்தது.
அதை புரிந்து கொண்ட அஜய்,யுகன்,குகன்"எங்கள வீட்டுக்கு தேவையான காய்கறி எல்லாம் வாங்கிட்டு வர சொல்லிருகாங்க பக்கத்துல இருக்கற கடைக்கு நாங்க போய் வாங்கிட்டு வரறோம்.அப்புறம் நாங்க வந்ததுக்கு அப்புறம் எல்லாரும் சேர்ந்து வீட்டுக்கு போலாம்"என்று சொல்லிவிட்டு அவர்கள் புறப்பட்டு விட்டார்கள்.
மீண்டும் தனிமையின் பிடியில் இரண்டு நெஞ்சங்கள்.இம்முறை தனிமை
அவர்களுக்கு சொர்க்கமாய் தெரிந்தது.அந்த தனிமை சொர்க்கத்தை ரசித்து கொண்டே பேசுவதற்கு அடித்தளமாய் ஒரு சிநேகப் புன்னகையை வீசிக் கொண்டது கண்களும் இதழ்களும்.இதழ்களில் பூத்த புன்னகையை விட ஆயிரம் புன்னகை பூக்கள் பூத்து மலர்ந்தது கண்களில்.மௌனம் இம்முறை கொடிய சாத்தானாய் தெரிய இருவரின் இதழ்களும் ஆயிரமாயிரம் மொழிகள் பேச துடித்தது.
முதலில் வென்னிலவனே பேச ஆரம்பித்தான் "உன்னோட கனவுகள் ஆசைகள் எதெல்லாம் நீ சொல்லனும் நினைச்சயோ அதெல்லாம் என்கிட்ட சொல்லு சூரியப்பிரபா. நானும் என்னோட குறிக்கோள் ஆசை கனவு அதெல்லாம் சொல்லறேன்"
சூரியா என்னதான் வாயாடியா இருந்தாலும் இம்முறை வெட்கம் வந்து அவளை தோற்றி கொள்ள தலை கவழ்ந்து பூமி பார்த்தது வாய் மட்டும் அவளுக்குகே கேட்காத வகையில் குரலும் உள்ளே சென்று ஒளிந்து கொண்டு "பஸ்ட்..... நீங்களே சொல்லறிங்களா"என்றுகூறி அவனை பார்த்தாள்.அவனும் தன்னை பார்த்தவுடன் தலையை கவிழ்த்துக் கொண்டாள்.
அவள் நிலை உணர்ந்த நிலவன் "ம்ம்.......ஒக்கே" என்ற ஒரு பெருமூச்சோட தொடர்ந்தான் "கிராமம் னாலே எவ்வளவு அழகுல.சுயநலமே இல்லாத ஜீவன்கள் வாழற சொர்க்கம்.என்னோட வருங்கால ஆசை என்னன்னா இந்த மாதிரி ஒரு அழகான கிராமத்துல ஒரு சிறிய கல்லூரில Professor ஆ வேலை பார்த்துகிட்டு அப்புறம் கொஞ்சமா நிலம் வாங்கி அதுல அளவான வீடு நமக்கு பிடிச்ச மாதிரி ரசிச்சு கட்டனும்.வேலை நேரம் போக மத்த நேரமெல்லாம் வீட்டுக்கு பக்கத்துல இருக்கற நம்ம நிலத்துல இயற்கை முறையுள காய்கறி அப்புறம் சின்ன சின்ன பயிறுகளான கடலை,பச்சை பயிறு அதெல்லாம் விளைவிச்சு நம்ம வீட்டுக்கு அதயே யுஸ் பன்னிட்டு மீதம் இருக்கறத குழந்தை இருக்கறவங்க வீட்டுக்கு கம்மி விலையில் எந்த இராசயனமும் கலக்காத அந்த காய்கறிகள் விக்கனும்.அப்புறம் 6 மாதத்துக்கு ஒரு தடவ எங்கயாச்சும் புதுசுபுதுசா ஒரு அழகான இயற்கை வளமிக்க ஒரு இடத்துக்கு போய் இரண்டு மூனு நாள் தங்கனும்.அப்புறம் கிராமத்துல இருக்கறதால பணம் வந்து அளவாதான் சம்பாதிக்க முடியும்.ஆனா என்னோட குடும்பம் சந்தோசமாவும் அது போக இருக்கறதுல மத்தவங்களுக்கு கேல்ப் பன்னிகிட்டு வாழ முடியும்.என் ஆசைகளை எல்லாம் சொல்ல சொன்ன நான் நாள் கணக்கா சொல்லுவேன்மா.இப்போ நீ சொல்லு சூரியப்பிரபா"என்று அவன் முடிக்க.
YOU ARE READING
எனது சூரியன் நீயடி.....உனது நிலவு நானடி......
Romanceவேறுபட்ட குணங்களை கொண்டு ஒற்றை கனவை சுமக்கும் இரண்டு மனங்களின் சங்கமம்.....