முன்கதை
வென்னிலவனும் சூரியாவும் தனியாக பேச இயற்கையை ரசித்துக் கொண்டே தோட்டம் நோக்கி செல்கின்றனர்.அந்த அதிகாலை நேரம் மிக ரம்மியமாக இருக்கிறது.இலைகள் பனித்துளிகளோடு பேசுவது பிடிக்காமல் கதிரவன் தன் பொன்கரங்களால் பனித்துளிகளை மிரட்டி கொண்டு இருக்கிறான்.ஜோடிப் பறவைகள் ஆனந்தமாய் ரிங்காரமிட்டு தங்களுக்குகான உணவு தேடி பறந்தது.மரங்கள் தனது கிளைகளை ஆட்டி பறவைகளுக்கு பிரியா விடை சொல்லியது.பூக்கள் தங்களது நறுமணம் மிக்க இதழ்களை மெல்லத் திறந்து புன்னகைத்து நின்றது.
இருவரும் இயற்கையின் அழகில் லயித்துக் கிடக்க மௌனம் அவர்கள் இடத்தில் தற்காலிகமாய் குடிபுகுந்தது.மனதோ அந்த மௌனத்தை விரட்டி அடிக்க பல வகையில் மூலையிடம் யோசனை கேட்டது.ஆனால் மௌனம் தன் பிடியை விடுவதாய் இல்லை.
தீடிரென்று "ம்மா........ம்மா...ம்மா..."என்ற சத்தம் செவிகளை எட்ட அங்கு அன்று ஒருநாள் வென்னிலவன் கிணற்றில் இருந்து காப்பாற்றிய கன்றுக்குட்டி தனது தாயின் அருகே நின்று கத்திக் கொண்டு இருந்தது.ஒரு வேளை தாய் பசுவிடம் இவன் தான் அன்று தன்னை காப்பாற்றியது என்று சொல்கிறதோ?வென்னிலவன் அந்த கன்னுக்குட்டியின் அருகே சென்று அதனை நீவிக்கொடுத்தான்.கன்னுக்குட்டியும் அவன் கைகளை தன் தலையை சாய்த்துக் கொண்டு தனது நேசத்தை வெளிக்காட்டியது.
சிறது நேரம் கன்றுக்குட்டியின் அருகிலேயே நின்று நீவிக் கொடுத்தான்.இதனை நின்ற இடத்தில் இருந்தே சூரியா பார்த்துக் கொண்டு இருந்தாள்.அவளை அறியாமலே ஒரு பெருமித உணர்ச்சி அவளுள் எட்டி பார்த்தது.அந்த இடமும் தேவ லோகம் போல் அமைதியாய் அழகாய் இருக்க தனது கனவுகளையும் குடும்பத்தினர் பேச சொன்னதை இங்கே பேச வேண்டும் என்று அவ்விடத்திலேயே நின்றாள்.
சற்று நேரத்தில் வென்னிலவனும் அவள் நின்ற இடம் நோக்கி வந்தான்.அவன் வருவதை கண்டு இவள் எப்படி ஆரம்பிப்பது? எப்படி எதிர்கொள்வது? என்று குழம்பிபோய் இருக்க அதை அவள் முகத்திலேயே படித்து உணர்ந்து கொண்டான் வென்னிலவன்.
YOU ARE READING
எனது சூரியன் நீயடி.....உனது நிலவு நானடி......
Romanceவேறுபட்ட குணங்களை கொண்டு ஒற்றை கனவை சுமக்கும் இரண்டு மனங்களின் சங்கமம்.....