பயணம் 6

2.7K 95 4
                                    

முன்கதை
கல்லூரி முதல் நாள் இனிமையாய் சென்றிட அனைவரும் அன்று இரவு நன்றாக தூங்கச் சென்றனர்.


மறுநாள் காலை 6.00 மணி.வென்னிலவன் எழுந்ததும் சிறிது நேரம் ஜன்னல் வழியே வந்த தென்றல் காற்றின் இனிமையை ரசித்து விட்டு பிறகு தன்னை சுத்தப்படுத்தி கொண்டு ஜாக்கிங் உடையில் வந்து நின்றான்.

கதவை திறக்கையில் காலையில் மலர்ந்த பூக்களின் மணமும் மருதாணி மணமும் அவனை அதில் மயங்கச் செய்தது.ஆழ்ந்த மூச்செடுத்து அனைத்தையும் தன்னுள் சிறை பிடிக்க எண்ணிணான்.

வீட்டைப் பூட்டி விட்டு தன் கால் போன போக்கில் மிகவும் மெதுவாய் இயற்கையை ரசித்த வண்ணம் ஓடிக் கொண்டு இருந்தான்.

மழையும் அவனை மகிழ்விக்க சிறு தூரல் அம்புகளை அவன் மீது செலுத்தியது.அதில் தன் மனதை முழுவதும் பறி கொடுத்து விட்டான்.தனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்றை முனு முனுத்தபடி அண்ணாது வானத்தை பார்த்தபடி மெதுவாய் ஓடினான்.

"சின்னச் சின்ன மழைத்துளிகள்சேர்த்து வைப்பேனோ.

மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ.

சக்கரவாகமோ மழையை அருந்துமா நான் சக்கரவாகப் பறவை ஆவேனோ.

மழையின் தாரைகள் வைர விழுதுகள் விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ.

சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேன் துளியாய் வருவாய்.

சிறு சிப்பியிலே விழுந்தால்ஒரு முத்தெனவே முதிர்வாய்.

பயிர் வேரினிலே விழுந்தால் நவதானியமாய் விளைவாய்.

என் கண் விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்."

இப்படி ஆனந்தமாய் ஓடினால் அவன் நூறு கிலோ மீட்டர் கூட ஓடி விடுவான்.
திடிரென்று கல்லூரிக்கு கிளம்ப வேண்டும் என்று நினைவு வர தான் வந்த வழியே திரும்பி வீடு நோக்கி ஓடினான்.

------------------------------------------------

அங்கு காலை 6.00 மணி வீட்டிற்கு வெளியில் சேவல் கூவ வீட்டின் உள்ளே கந்தர் சஷ்டிக் கவசம் ஒழித்தது.

எனது சூரியன் நீயடி.....உனது நிலவு நானடி......Where stories live. Discover now