இக்கதையின் மூன்று பகுதிகளையும் தொடர்ந்து படித்து எனக்கு ஆதரவு அளித்த வாசக நெஞ்சங்களுக்கு என் மனம் கனிந்த நன்றிகள்.தொடர்ந்து என் எழுத்துகளைப் படித்து அதற்கு உயிர் கொடுங்கள்.தவறுகள் இருப்பின் கூறுங்கள் திறுத்திக் கொள்கிறேன்.....
முன்கதை:
விடுமுறை என்பதால் அஜய் தன் அண்ணன் வென்னிலவன்(நிலவன்) உடன் இரண்டு நாள் தங்கி விட்டு வருவதாய் பெற்றோரிடம் கூறினான்.(இரண்டு நாள் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்று இப்பகுதியில் காணலாம்).அன்று காலை 6.00 மணி. வென்னிலவன்(நிலவன்) சமையல் அறையில் மும்மரமாய் சமைத்துக் கொண்டிருந்தான்.எப்பொழுதும் 6.00 மணிக்கு எழுபவன்.இன்று 5.00 மணிக்கே எழுந்து விட்டான்.அந்த வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது ஆனால் அதன் அழகு அவனை கவர்ந்து விட்டது.(நகரத்திலே இயற்கையை நினைத்து ஏங்கி வாழ்ந்தவனுக்கு கிராமத்து வீடு கிடைத்தால் குதிக்க மாட்டானா).
அது அழகிய மாடி வீடு.நிலவன் குடியிருப்பு மேல் தளத்தில்.அளவான வீடு ஒரு சமையறை,வரவேற்பறை மற்றும் படுக்கையறை வித் அட்டெஜ்டு குளியலறை.வீட்டின் வெளியே மாடித் தோட்டம் அமைக்கப்பட்டு பார்பதற்கு சிறு நந்தவனம்போல் இருந்தது.
ஒருவழியாக 7.00 மணிக்கெல்லாம் நிலவன் சமையலை முடித்து விட்டான்.அப்பொதும் அஜய் இழுத்து போர்த்தி கொண்டு தூங்கினான்.
"அஜய் !அஜய்!எழுந்திரிடா மணி 7.30 ஆச்சு.ஒழுங்கா வந்து சாப்பிடு.எனக்கு காலேஜ் போக லேட் ஆச்சுடா.டேய் அஜய்"எனக் கத்தி கொண்டு இருந்தான் நிலவன்.
அஜய் படுத்துக்கொண்டே உளறினான்"நீ தூங்களனா ஏன்டா அடுத்தவன் தூக்கத்த கேடுக்கற.உனக்கு லேட் ஆச்சுனா நீ போடா.நான் என்ன குழந்தையா பசிச்சா பொட்டு சாப்பிட்டுக்கறேன்".
"உன்ன நம்ப முடியாதுடா.இப்ப இப்டி சொல்லிட்டு அம்மா கிட்ட அண்ணன் சாப்பாடு கூட போடலனு சொல்வ.வா டா வந்து சாப்டு"என்றான் நிலா.
BINABASA MO ANG
எனது சூரியன் நீயடி.....உனது நிலவு நானடி......
Romanceவேறுபட்ட குணங்களை கொண்டு ஒற்றை கனவை சுமக்கும் இரண்டு மனங்களின் சங்கமம்.....