முன்கதை;
சூரியா பாட்டியுடன் ஆட்டம் போட்டு விட்டு அன்று நன்றாக உறங்கினாள்.மறுநாள் அவளின் குடும்பத்தினர் கோவிலுக்கு சென்று விட்டு வந்தனர்.அன்று என்ன நடந்தது என்று இப்பகுதியில் காண்போம்.குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்த குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியாகவும் மனநிம்மதியுடனும் காணப்பட்டனர்.சூரியாவுக்கும் பாட்டிக்கும் அவர்கள் அனைவரும் புதிதாக தென்பட்டனர்.அவ்வளவு மகிழ்ச்சி அனைவரின் முகத்திலும்.
அதிலும் அண்ணன்கள் இருவரும்"சூரிக்குட்டி உனக்கு ஒரு பெரிய சர்பரைஸ் இருக்கு" என்று கூறி சிரித்தனர்.
அவர்கள் அப்படிக் கூறியதும் தாத்தா அவர்களை கோபமாக பார்த்தார்.அவர்கள் இருவரும் எதுக்கு வம்பு என்று தோட்டத்திற்கு சென்று விட்டனர்.
அனைவரையும் பார்த்து"அப்படி என்ன சர்பரைஸ்"என்று கேட்டாள்.
அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து இவளிடம் எப்படிக் கூறுவது என்று விழித்துக் கொண்டு இருக்க தாத்தாவே முதலில் ஆரம்பித்தார்.
"சூரிக்குட்டி உன்ன முத்தாய் பாதுகாக்க போற சிப்பியை நாங்க கண்டு புடிச்சுருக்கோம்.அந்த சிப்பியை உனக்கு பிடிச்சுருக்கானு நீ தான் சொல்லனும்"என்றார் தாத்தா பக்குவமாய்.
"என்ன தாத்தா சொல்லரிங்க எதோ முத்து சிப்பினு எனக்கு ஒன்னுமே புரியல.நீங்க சொல்லவரத பட்டுனு நேராவே சொல்லுங்க"என்றாள் வேகமாக.
பின்பு அவளது தாய் சாந்தவி தொடர்ந்தார்"சூரி உனக்கு நாங்க எது செஞ்சாலும் நல்லதுதான் செய்வோம்.அப்புறம் அது உனக்கு பிடிக்கும் என்கிற நம்பிக்கையோட ஒ....ரு.... முடிவு எடுத்துருக்கோம்.ஆனால் உனக்கு பிடிச்சுருந்தா தான் மேற்கொண்டு எல்லாமே.கோவில்ல உனக்கு ஒரு வரன் பார்த்திருக்கோம்.ஜாதகம் கூட நல்லா பொருந்தி வருது.ஆனா உனக்கு பிடிச்சிருந்தா மட்டும் தான் மேற்கொண்டு பேசறது எல்லாம்.என்ன சொல்லற தங்கம்..."என்று தயங்கி தயங்கி ஒரு வழியாக கூறி முடித்தார்.
ESTÁS LEYENDO
எனது சூரியன் நீயடி.....உனது நிலவு நானடி......
Romanceவேறுபட்ட குணங்களை கொண்டு ஒற்றை கனவை சுமக்கும் இரண்டு மனங்களின் சங்கமம்.....