பயணம் 2

5.4K 106 13
                                    

அன்று காலை 8.00 மணி .கீங் கீங்...பாம் பாம்...கீங் கீங் கீங்... என பல விதமான இயந்திரங்களின் கதறல் சத்தம்.அதை கேட்டு மேலே பறக்கும் சுதந்திர பறவைகள் கூட பயந்து வேற இடத்துக்கு போக தன் சிறகை துரித படுத்தியது.இதில் இருந்தே தெரியும் நான் இயந்திரங்களா  ஓடற மனிதர்கள் வாழும் ஒரு பெரு நகரத்த பத்தி  சொல்லறேனு.
    
      அது முக்கிய சாலையின் அருகில் அமைந்த ஒரு உயர்ந்த அடுக்கு மாடி குடியிருப்பு.அனைத்து ஆடம்பர வசதிகளும் அமைந்த குடியிருப்பு.அங்கு இயற்கை செயற்கையால் ஆட்சி செய்யபட்டு இருந்தது.செயற்கைப் பூங்கா,பூ,மரம் என அனைத்தையும் செயற்கையாய் பார்த்தது மனிதர்களும் இயந்திரமாய் மாறி இருந்தனர்.

      நாலாவது தலத்தில் ஒரு பெரிய வீடு.அனைத்து இயந்திர சாதனங்களும் அந்த வீட்டில் அழகாய் இடம் பெற்றிருந்தது. அந்த வீட்டின் நபர்கள் 24 மணி நேரம் பத்தாம அடுத்த நாளின் சில மணி நேரத்த கடன் வாங்கி ஓடிடே இருந்தாங்க பணம் என்னும் வெற்று காகிதத்த நம்மி.

    ஆனா அந்த வீட்டுல ஒருத்தர் மட்டும் பணத்த வெறும் காகிதமா நினைச்சுட்டு நகரத்துவாசிகளில் ரொம்ப மாறுபட்டு இருந்தாங்க.அவங்க பேரு வென்னிலவன்.சுருக்கமா எல்லாருக்கும்   நிலா.பேருக்கேத்த மாதிரி அவரோட குணத்துளையும் நிலாவின் குழுமை ததும்பும்.ரொம்ப நல்ல பையன்.எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் மனிதன்.மற்றவர்களின் கஷ்டத்தை புரிந்து நடப்பவர்.கண்களில் எதையும் சாதிக்க துடிக்கும் வெளிச்சம்.எப்போதும் தவழும் தன்மையான புன்னகை. கம்பிரமான நடை.
          
"மொத்ததில்  செயற்கை நகரத்து இயற்கை நிலா நம் கதா நாயகன்''.

    நிலாவின் குடும்பம் சின்ன குயில் கூடு.தந்நை-கண்ணண்,தாய்-ராதா,தம்பி-அஜ்ய்.கண்ணண் குருப் ஆப் கம்பனிஸ் நிலாவின் தந்தை தாயின் 30 வருட உழைப்புன் பரிசு.இன்னும் அயராது ஓடி கொண்டே இருக்கின்றனர்.

       நிலா,அஐய் சிறு வயதில் இருந்தே விடுதியில் தான் பயின்றனர்.வாரம் ஒருமுறை பெற்றோர் வந்து பார்த்து விட்டு செல்லவர். தாத்தா, பாட்டி மற்றும் அவர்களின் சொந்தங்கள் பற்றி அவர்களிடம் கூறியது இல்லை.நிலா சிறுவயதில் கேட்டும் பதில் கிடைக்க வில்லை.பிறகு நிலாவும் கேட்பதை நிறுத்தி விட்டான்.ஆனால் அவனுள் சிறு ஏக்கம் இருந்தது .

         நிலா மற்றும் அஜய்க்கு ஐந்து வருட வயது வித்தியாசம்.அதனால் பெரிதாக ஒட்டுதல் இல்லை.அஜய் இப்போது தான் கல்லூரி முதல் ஆண்டு படிக்கிறான்.நிலா பட்டயப்படிப்பு முடித்து வணிகவியல் பட்டம் பெற்று தற்போது பல கல்லூரியில் பேராசிரியர்  வேலைக்கு அழைகிறார்கள்.
                
      ஆனால் நிலாவின் மனதில் ஒரு ஏக்கம்.சிறு வயதில் இருந்தே விடுதியில் பயின்று இயந்திரமாய் நகரத்தில் வாழ்ந்து அழுத்து விட்டது.

        தன் வேலையாவது ஒரு அழகிய கிராமத்தில் அமைந்து அங்கு வாழும் இயற்கை மனிதர்களோடு வாழ வேண்டும் என்று வெகு ஆசை.பணம் ஒரு பொருட்டல்ல தன் செலவுகளை பூர்த்தி செய்யும் அளவு இருந்தால் போதும்.தன் ஆசையை பெற்றோரிடம் கூறினான்.அவர்களும் சரி என்றனர்.எப்போது நிலாவின் ஆசைக்கு பச்சை கொடி தான்.பெற்றோரும் தங்கள் இரு மகன்கள் மீதும் மிகுந்த பாசம் வைத்துள்ளனர்.

         அவர்கள் இளமையில் பட்ட கஷ்டம் தங்கள் செல்லவ புத்திரர்கள் பட கூடாது என்று பாடுபட்டு கொண்டு இருக்கிறார்கள்.நிலாவும் அவர்கள் மனம் அரிந்து தன்மையாய் நடந்து கொள்வான்.

         அதே போல் அனது நீண்ட நாள் ஆசையும் விட முடியவில்லை.ஆதலால் ஒரு அழகிய ஊரில் இருக்கும் கல்லூரிக்கு வேலைக்கு செல்ல புறபட்டு விட்டான்.ஒரு குடும்பம் வாழும்  அளவுக்கு வீடு ஒன்றை மகனுக்கு அந்த ஊரில் பார்த்து கொடுத்து நல்ல அறிவுரை வழங்கிவிட்டு பெற்றோர் வந்து விட்டனர்.அஜய்க்கு விடுமுறை என்பதால் நிலாவுடன் 2 நாள் தங்கி விட்டு வருவதாய் கூறி விட்டான்.

(நிலா, சூரியாவின் அறிமுகம் முடிந்தது....அடுத்த பகுதியில் இருந்து அவர்களுடன் பயணிக்கலாம்)

           பயணங்கள்       தொடரும்....

எனது சூரியன் நீயடி.....உனது நிலவு நானடி......Tahanan ng mga kuwento. Tumuklas ngayon