இளங்காலை பொழுது சூரியாவின் வீட்டு சேவல் "கொக்கரகொ கோ" என்று கூவி இனிய காலை பொழுதை நினைவுட்டி மக்களை நித்திரையில் இருந்து எழுப்பி கொண்டு இருந்தது.
கடிகாரம் மணி 7.00 நெருங்கியது.அப்பொது தான் நம்ப இளவரசி சூரியா எழுந்து குளித்து முடித்து கோவிலுக்கு தயாராகிக் கொண்டு இருந்தாள்.இன்று கல்லூரி முதல் நாள்.வீட்டில் ஆடவர் அனைவரும் விவசாயம் செய்ய சென்று விட்டனர்.மகளிர் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
முந்தைய நாள் இரவே தன் சின்ன அண்ணண் யுகனிடம் காலையில் கோவிலுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றிருந்தாள்.கல்லூரிக்கு எப்போதும் தனது Peptல் தான் செல்வாள்.கோவில் சற்று தூரம் என்பதால் அண்ணணுடன் செல்கிறாள்.
(தூரம் இருக்கிற கோவிலுக்கு தனியா போக பயபடறவலாம் இல்ல நம்ப சூரியா.விட்டா ஆகாயத்துல கூட அனந்தம் ஆ பறப்பா.பாட்டியின் அன்பு கட்டளைக்கு அடங்கி அப்படி போற).
"சூரிக்குட்டி இன்னும் என்ன பன்னற எனக்கு தோட்டத்துக்கு போக லேட் ஆச்சு. வா சீக்கரம்"என்று யுகன் கத்தி கொண்டு இருந்தான்.
அண்ணண்களுக்கு அவள் எப்போதும் சூரிக்குட்டி தான்.சூரியாவுக்கு நண்பர்கள் கூட்டம் பெரிதாய் அமையவில்லை.அவளின் நேர்மையான பேச்சும்,சிறு முன்கோபமும் தான் இதற்கு காரணம்.நண்பர்கள் இல்லை என்று அவள் கவலை படாதற்கு காரணம் தன் அண்ணண்மார்கள்.அவளை தலையில் வைத்து தாங்குவார்கள்.
"வந்துட்டேன் னா"என கத்தி கொண்டே சமையலறையில் தகவலை சொல்லி விட்டு வெளியில் வந்தாள்.
கட்டுத்தறையில் மாடுகளுக்கு தீவனம் வைத்து கொண்டிருந்த பாட்டி யிடம் "போயிட்டு வாரேன் பாட்டி "என்று கூவிக் கொண்டே யுகன் பைக்கில் ஏறினாள்."பார்த்து போயிட்டுவாங்க கண்ணுகளா"என்று பாட்டி பதில் கூவல் விடுதாள்.
அண்ணணும் தங்கையும் செந்தில் ஆண்டவர் சந்நிதி முன் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்றனர்.முருகன் ...வடிவேலன்... சந்தன அலங்காரத்தில் கம்பீரமாய் காட்சி தந்தார்.மனமுருக முருகனை தரிசித்து விட்டு வீடு வந்தனர்.அவர்கள் வீட்டில் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து உணவருந்துவது தான் வழக்கம்.அவர்கள் வரும் போது அனைவரும் கூடி இருந்தனர்.ஒன்றாய் அமர்ந்து உணவருந்தி விட்டு அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற்று கல்லூரிக்கு தயாராகி கொண்டு இருந்தாள்.
அம்மா சாந்தவியின் அறிவுரைகள் தொடங்கியது"காலேஜ் முதல் நாள் கொஞ்சம் அடக்கி வாசி டி.வாலெல்லாம் வீட்டோட மூட்டை காட்டி வெச்சுட்டு போ.ஏழு கழுத வயசு ஆகிருச்சு பொன்னு மாதிரி நடந்துக்கோ.ஊர் வம்பேல்லாம் இழுத்து விட்டு வந்த அப்பறம் கால் பழுக்க சூடு தான் போடுவேன்".அதற்கு முகத்தை சுருக்கி கொண்டு ஒற்றை புருவத்த தூக்கி வில்லி மாதிரி ஒரு லுக்க விட்டுட்டு"நீ சூடு போட்டாலும் பரவால்ல.ஐ டோன்ட் கேர்.எனக்கு தப்புனு படறத நா தட்டி கேட்பேன்."என்றால் சூரியா.
"நீ பெரிய ஜான்சி ராணி யாடி உலகத்தையே எதிர்க"என்றார் சாந்தவி எரிச்சல் உடன்.
"நான் ஜான்சி ராணி இல்லமா.ஆனா சூரியப்பிரபா.சரி நா போயிட்டு வரேன்."என்று ஒரே ஓட்டமாக ஓடி வந்து தனது இளம்பச்ச நிற Pept ஐ ஸ்டாட் செய்தால்.
"உடம்பு முழுசும் கொழுப்பு இருந்தா நீ இப்படி தான் டி பேசுவ.சரி பார்த்து போய்ட்டு வாடி வாயாடி"என்றார் அம்மா."பச்சை நிற ஸ்கூடியில் பறந்தாள் சூரியப்பிரபா".............
கல்லூரியிலும் அவள் ஆர்பாட்டங்கள்
தொடரும்.....
ESTÁS LEYENDO
எனது சூரியன் நீயடி.....உனது நிலவு நானடி......
Romanceவேறுபட்ட குணங்களை கொண்டு ஒற்றை கனவை சுமக்கும் இரண்டு மனங்களின் சங்கமம்.....