ஹீரோயின் அறிமுகம்

7.9K 165 6
                                    

மதுரை பக்கத்துல ஒரு அழகிய கிராமம், கிராமம் அப்டின்னு சொன்னதும் 80-ஸ் பிலிம் ல வருமே பச்சை பச்சேன்னு வயல்வெளி ட்ராக்ட்டர் சத்தம் ஒரு ஓத்தயடி பாதை அப்டியே ஒரு ஊருக்கு ஒரு டீக்கடை அப்டில்லாம் பீல் பன்னிராதிங்க. இப்போ அப்டில்லாம் கிராமம் இல்ல உண்மைய சொல்லனும்னா நகரத்துல இருக்கிற அத்தனை வசதிகளும் கிராமத்துலயே வந்திரிச்சி. இது ஒரு developed வில்லேஜ்  இந்த ஊரு பேரு மாவில்பட்டி இந்த வில்லேஜ் பேர்ல மட்டும் தான் கிராமம். ஓகே நம்ம கதைக்கு வருவோம். நம்ம ஹீரோயின் பேர் மீனாட்சி இந்த பேருக்கு அப்டியே பத்து பொருத்தமும் பக்காவ மேட்ச் ஆகுற மாதிரி அப்டி ஒரு அழகு. பொறுமையில அவங்க ஒரு பூமாதேவி, அதே மாதிரி கோவப்பட்டா சூறாவளி தான். ஒரு வீட்ட பொறுப்பா எப்படி பாத்துகிறதுன்னு அவங்ககிட்ட தான் கத்துக்கணும். இந்த காலத்துல இப்டி ஒரு பொண்ணா அப்டின்னு ஆச்சர்ய பட வைக்கிற அளவுக்கு ஒரு பொண்ணு இல்ல இல்ல தேவதை. இவங்கத்தான் நம்ம கதையோட ஹீரோயின்.
நம்ம ஹீரோயின் வீட்ல அம்மா (கல்பனா) அப்பா (மாணிக்கம்)
ரெண்டு அன்னன் மூத்தவன் (மாறன்) இளையவன் (சக்தி)  ஒரு அண்ணன் இருந்தாலே ஹீரோ சமாளிக்கிறது கஷ்டம் இதுல ரெண்டு அண்ணா. மாறன் ரொம்ப அமைதியான கேரக்டர் ஆனா சக்தி நேர் எதிர் பயங்கர கோவகாரன் ஆனா தங்கச்சி அப்டின்னா உயிர்.
மீனாட்சி பத்தி இன்னும் சொல்லனும்னா நீங்களே போக போக புரிஞ்சிபிங்க. ,😄😄😄

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ