பயணம் - 2

5.6K 132 3
                                    

சிவா, கிரிஷ் & நம்ம ஹீரோ சரோ மூணு பேரும் ரொம்ப சீரியஸ் அ ரூம் ல உக்கார்ந்து என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்காங்க...
சிவா பொறுமை இழந்து வேணும்னா நானே அந்த பொண்ணுகிட்ட நேரா பார்த்து எனக்கு இந்த கல்யானத்துல விருப்பம் இல்லன்னு சொல்லிடவா?
உடனே கிரிஷ் டேய் பேசுறது நீயா? உனக்கு எப்படிடா இவ்ளோ தைரியம் வந்திச்சி?
அதுக்கு சிவா டேய் எனக்கு அப்பா மட்டும் தான் பயம் மத்தபடி நான் தைரியசாலி.
போதும் போதும் உனக்கே நீ பில்டப் குடுகிறத நிறுத்து என கிரிஷ் சொல்ல
டேய் நானே என்னையே பாராட்டலன்னா வேற யாருடா சொல்லுவா?
வேணும்னா நம்ம ஹரிணி ய சொல்ல சொல்லவா?
அடேய் உனக்கு கோவம் வந்தா என்ன ரெண்டு அடி கூட அடி ஆனா அவகிட்ட மட்டும் கோர்த்து விடாதா பிளீஸ் என சிவா கெஞ்ச
நில்லுடா இதையும் அவகிட்ட சொல்லி தரேன் என கிரிஷ் மிஞ்ச,
பிளீஸ் டா ஏற்கனவே அவ எண்னையும் ஊருக்கு கூப்பிட்டு போ நானே வீட்ல வந்து பேசுரேன்னு சொன்னவள கெஞ்சி விட்டுட்டு வந்திருக்கேன், அச்சச்சோ என சிவா முழிக்க!!!

டேய் என்னாச்சுடா?

கிரிஷ் நான் மறந்தே போயிட்டேன், அவ ஊருக்கு போனதும் அவளுக்கு கால் பண்ண சொன்னா? இப்ப நான் செத்தேன்.. சரிடா நான் இப்ப போயி பேசிட்டு வரேன்னு சொல்லிட்டு சிவா கிளம்ப,

சரிடா நீ ஹரிணி கிட்ட போயி வாங்கி கட்டிக்கோ...  நான் கொஞ்ச நேரம் தூங்குறேன் என கிரிஷ் சொல்லிட்டு நம்ம ஹீரோ வ பார்த்தா அவர் ரொம்ப சீரியஸ் அ யோசிட்டு இருக்காரு...

(ஆமாங்க நம்ம ஹீரோ கூட இந்த சீன் ல ஆரம்பத்துல இருந்து இருக்காரு...)

டேய் சரோ? என கிரிஷ் கத்த...

நம்ம ஹீரோ ஒரு ரியாக்ஷன் இல்லாம யோசிட்டு இருக்காரு

டேய் மாப்ள என்னாச்சுடா என சொல்லி தோள் ல தட்டுனதும் தான் நம்ம ஹீரோ இந்த நிகழ்காலத்துக்கே வந்தாரு...

சொல்லுடா கிரிஷ் என்ன? ஆமா சிவா எங்க ஆளையே காணும், என சரோ கேட்க

அட பாவி நீ எந்த உலகத்துல இருந்த? இவ்ளோ நேரம் இங்க ஒரு போர் எ நடந்திச்சி, நீ என்னன்னா இப்டி கேக்குற? 😨

என்னடா சொல்ற? எனக்கு எதுவுமே கேட்க 😌😌😌

எப்படிடா கேக்கும் சார் தான் இந்த உலகத்துலயே இல்லயே? சரி அப்டி சார் என்ன யோசிசிங்கன்னு நான் தெரிஞ்சிகாலாமா?

டேய் ஒன்னும் இல்ல நம்ம சிவா வ பத்திதான் யோசிச்சிட்டு இருந்தேன்.

பொய் சொல்லாத அதான் உன் மூஞ்சிய பாத்தாலே தெரியுதே, என்ன இன்னும் பஸ் ஸ்டாப் ஞாபகத்துல இருக்கியா?

ச்சீசீ ச்சீசீ இல்லடா, என சிவா சொன்னாலும் அவனோட மனசு தான் அவன்கிட்டயே இல்லையே அப்டின்ற உண்மைய சொல்லவா முடியும் , சரி கிரிஷ் நீ தூங்கு நான் ஆஃபீஸ் கு ஒரு கால் பண்ணனும் நான் பேசிட்டு வரேன்னு சொல்லிட்டு நம்ம ஹீரோ மாடிக்கு போயிட்டாரு...

இங்க கிரிஷ்... ஏதோ சரி இல்லையே சரி நம்ம தூங்குவோம்... அப்புறம் பேசிக்கலாம் னு தனக்குள்ளே சொல்லிட்டு பெட் ல சரிஞ்சி தூங்க ஆரம்பிச்சிட்டாரு...

நம்ம ஹீரோ மாடில நின்னுட்டு என்னதான் கிரிஷ் கிட்ட இல்லன்னு சொன்னாலும் அவனோட மனசு அந்த பேருந்து நிலையத்தை நோக்கி சென்றது...

(வாங்க நம்மலும் அங்க என்ன நடந்திச்சின்னு தெரிஞ்சிப்போம்...)

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora