கார்கல் முக்காலத்தையும் முன்பே கணிக்கும் வல்லமைப் பெற்றவர். இப்படி ஓர் பிரச்சனை வரும் என்று முன்பே கணித்து இருந்தார்.
அதன்படியே தான் என்ன செய்ய வேண்டும் என்று வழிமுறையையும் முன்பே கணித்து வைத்து இருந்தார்.
விபினை அழிக்கும் முறைப்பற்றி அனைவரிடமும் கூறினார் கார்கல்.
"வழிமுறை என்ன அப்படின்னு தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி ... சூரியக் கல்லைப் பத்தின ழுழுமையான விஷயங்களை நாம தெரிஞ்சுக்கனும்.
" என்று கார்கல் தொடர்ந்தார்...
"சூரியக் கல் இருக்கறது ஒண்ணும் கட்டுக்கதை கிடையாது..! உண்மைத்தான் ... அதைப் பத்தி நீங்க சொன்ன விஷயங்களும் உண்மைத்தான்.
"
"ஒருவன் அழிவே இல்லாம இந்த உலகத்தை ஆள்றதுக்கு ஒரே வழி தான் சூரியக் கல்.
!"
"நூறு வருஷத்துக்கு முன்னாடி ஸ்பிளானர்ங்கற கிரகத்துல பிறந்த ஒரு ஆண் மகன்தான் ஜாக்கோ. ஏழ்மை குடும்பத்துல பிறந்தவன் அரசனாக உருவாகனும் ங்கற எண்ணத்துல சிறுவயதிலே பயிற்சிகளை மேற்கொண்டான். சில தீயப் பழக்கங்களும் அப்போதான் அவனுக்குள்ள ஊற்று எடுத்தது. "
"அப்போ எதிரி கிரகத்துல இருந்து போர் தொடுத்தப்ப அவனோட வம்சமே அழிச்சுப் போச்சு அப்போ தான் ..நாம் ஏன் இந்த எல்லா உலகத்தையும் ஆளக்கூடாதுன்னு முடிவுசெஞ்சான். "
" தான் வாழ்ந்த வம்சத்தை அழிச்சவன்ன முதல்ல அழிக்க ஆரம்பிச்சான் அப்புறம் மத்த கிரகத்துங்க மேல எல்லாம் போர் தொடுக்க ஆரம்பிச்சான். தனக்குன்னு ஒரு வம்சத்தை உருவாக்க நினைச்சான்."
"ஒவ்வொரு கிரகமும் இருளால சூழ ஆரம்பிச்சது. ஒவ்வொரு மக்களையும் கொன்ணு குவிக்க ஆரம்பிச்சான்.
"
"ஓர் கட்டத்துல அவன்ன கட்டுப்படுத்தவே முடியல.. அப்போ தான் மத்த கிரகத்துல இருக்கறவங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்தாங்க.. சூரிய கல்லை உபயோகிக்க நினைச்சாங்க..."
" சூரியக் கல்லை கையாளறது அவ்வளவு எளிதில நடக்கற காரியம் கிடையாது. அதுக்கு பலமுறை பயிற்சி எடுத்து கடினமான வழிமுறைகளை கடைப்பிடிச்சா தான் முடியும். அப்படி அதற்கு பயிற்சி எடுத்தவர் தான் ஆலம் மில்லாரி அரசரோட தாத்தா... மார்லன் மில்லாரி.. இந்த மில்லாரி வம்சத்தை உருவாக்கியவரும் அவரே ."
அவர் ஒருவரால மட்டும் தான் சூரியக் கல்லை முறையா உபயோகிக்க முடியும்.
சூரியக் கல்லை சாதாரண கண்களால பார்க்க முடியும் ஆனா அது சூரியனோட வெளிச்சம் எங்க உருவாகுதோ அப்போ தான் சூரியக் கல் ஒளிர ஆரம்பிக்கும். அப்படி ஒளிர ஆரம்பிக்கும் போது அதை பார்க்கறவங்க எரிஞ்சு சாம்பல் ஆகிருவாங்க.
அதைப்பத்தி ழுழுமையா அறியாத ஜாக்கோ சூரிய ஒளிப்பட்டதும் அவன் எரிஞ்சு சாம்பலாகிட்டான்.
"ஆனா அவன் வீசுன்ன வாள் மார்லன்யோட நெஞ்சுல பாயிஞ்சது நாளல் சூரியக்கல்லை முறையா பயன்படுத்த முடியாம மார்லன் மில்லாரியையும் நாம இழந்துட்டோம். அவர் கையில் இருந்த சூரியக் கல்லும் வெடிச்சு சிதறிப்போச்சு... அந்த கல்லு 8 பாகங்களா பிரிஞ்சி பிரபஞ்சத்தோட ஒவ்வொரு மூளையிலும் சிதறிப்போகிருச்சு..
"
அனைவரும் திகைப்பில் ஆழ்ந்தனர்.
ஜோன் மட்டும்" கார்கல் என்னோட மூதாதையார்ல மட்டும் எப்படி சூரியக்கல்லை ப் பார்க்க முடியும்...? அப்படி இருக்கறப்ப எப்படி விபினால மட்டும் சூரியக் கல்லை கையாள முடியும்.
? "
இளவரசே... " மார்லன் மிலாரியின் கண்கள் அதித சக்திப் படைத்தது... உங்கள் தந்தையும் அறிந்திராத விஷயங்கள் ... அவரது கண்கள் எப்போதும் சிவப்பு நிறத்தில் மட்டுமே இருக்கும்... அவரின் கண்கள் சூரியப் பகவானின் கண்கள் போன்றது... சூரிய ஒளியை தாங்கிக் கொள்ளும் சக்தி படைத்தவர்."
"இப்போது விபினைப் பற்றி கூற வேண்டும் என்றால் அவன் அறிவில் சிறந்தவனாயிற்றே.. அதற்கு பல வருடங்கள் ஆய்வு மேற்க் கொண்டு அவன் கண்டுபிடித்தது தான். ஒளியை பிரதிபலிக்க இல்லாத பெட்டி..
"
"அது எப்படி சாத்தியமாகும்... அது ஒளியை எதிரொலிக்காவிட்டால் எப்படி அவனால் அனைத்து கிரகங்களையும் தனது வசப்படுத்த முடியும்.
"என்று ஜோன் கூற
"இளவரசே.. பிறரை அழிக்க நினைப்பவன் தன்னை காத்துக் கொள்ள சிந்தித்து இருக்க மாட்டானா...? ஒளி ஊடுருவ இயலாத ஆடையை தயாரித்து இருக்கலாம். இது எனது யூகம் மட்டுமே அரசே...
அது சாத்தியமா என்று எனக்கு தெரியவில்லை... ஆனால் அதை தவிர விபினிற்கு வேறுவழி இருந்து இருக்காது."
"சூரியக் கல் யாரிடம் இருக்கிறதோ ... அவர்களுக்கு இழப்பு என்ற ஒன்று இருக்காது.. அது மட்டும் இல்லை.. அவர்கள் நினைத்தால் ஒளியின் வேகத்தை விட அதிகமாக ஒர் இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு கடந்து செல்ல இயலும்.
"
"ஒளியை விட வேகமாவா அதற்கு வாய்ப்பே இல்லை... காலச்சக்கரம் இல்லாம ஒருத்தர் எப்படி ஒளியை கடக்க முடியும்.
"
"மர்மங்கள் நிறைந்த பல விஷயங்களை தனக்குள்ள அடக்கி இருக்கிறது தான் சூரியக் கல்... நாம் தெய்வக் கடவுளாக வழங்கும் சூரியப் பகவானின் அருளால் நிறைந்த கல் ஒளியை கடக்க முடியாதா என்ன..
?"
"அதுமட்டும் இல்லை சூரியக் கல் உள்ள ஒருவனிடம் ஒற்றை நிமிடத்தில் பல உருவங்களை மாற்றிக் கொள்ளவும் முடியும்... காலத்தையும் மாற்றி அமைக்க இயலும்.
"
கார்கல் கூறி முடித்ததும் ...
மாளிகையில் நிசப்தம் தான் மிச்சியது.
"ம்ம்ம என்று சொருமிக் கொண்டே கார்கல் தொடர்ந்தார்.
"இளவரசே... எல்லா விஷயங்களையும் கூறிவிட்டேன் ... அதில் உள்ள ஆபத்துகளையும் கூறிவிட்டேன். இனி அவனை எப்படி அழிப்பது என்று நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் " என்று கார்கல் கூற..
"நான் எப்படி கார்கல்... முடிவு எடுக்க முடியும் நான் ஒரு சாதாரண இளவரசன் தான் அரசர் கூட இல்லையே...உங்களுக்கே தெரியும் இளவரசர் எனில் குறிப்பிட்ட சக்திகளை மட்டுமே கையாள இயலும்..
"
"அரசே நான் ஏன் ஜோன் மில்லாரி செல்ல வேண்டும் என்று சொல்கிறேன் என்று புரியவில்லை தானே...
"
"ஆமாம் " என்று ஆலம் மில்லாரி கூற...
"ஜோன் மில்லாரி வேறு யாரும் இல்லை... மார்லன் மில்லாரி..."
- தொடரும்.
ŞİMDİ OKUDUĞUN
காலப் பயணம் (தி டைம் டிராவல்)
Maceraஜோன் நமது கதையின் நாயகன். சில காரணங்களால் காலப்பயணம் மேற்கொள்கிறான்... அப்படி மேற்கொள்ளும் போது சில சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறான்... இறுதியில் அவன் நினைத்த காரணத்தை அடைந்தானா...? கதையோடு பயணிக்க தயாராகுங்கள்...