!! 1 !!

13.3K 151 49
                                    





நாராயணா நாராயணா எனக்கு ஏன் இந்த சோதனை என்னவா இருக்கும் யாரு அவன் என்ன எதுக்கு பார்க்கணும் சொல்லுறான் , இந்த சந்தியாக்கு எங்கே போச்சி அறிவு... லூசு.. இப்பிடியா யாரோ கேட்டா சரின்னு சொல்லிட்டு வருவா ( ஆனால் பாவம் அந்த அப்பாவிக்கு தெரியவில்லை அந்த யாரோவையும் தன் தோழி தான் ஆட்டி வைக்கிறாள் என்று ) என பல எண்ணங்களுடன்.. அவள் கோவில் பிரகாரத்தை சுற்றி.. வந்து கொண்டு இருக்கும் பொது " தொப் என்று ஒரு நெடியவன் மீது மோதி கொள்ள " அய்யோ" சாரி , நான் தெரியாம .....முன் பின் தெரியாத யாரோ ஒரு ஆண்மகன்.. மேல் மோதிவிட்ட.. பதட்டம்.... அவளுக்கு...

அவள் முடிக்கும் முன் கை மறைத்து, " நீ தான் அந்த வென்மதியா ,? என கேட்ட அந்த நெடியவனை விச்சிதிரமாய் மற்றும் மிரட்சியாய் பார்த்தாள் வெண்மதி ..

நம்ம பெயரை வேற சரியா சொல்லுறான் யாரா இருக்கும்.

வார்த்தை வராமல் , தந்தி அடிக்க , " ஆ.. ஆமா யாரு நீங்க ? என வார்த்தை அவளுக்கு தந்தி அடித்தது

அதை ஏதும் கண்டுக்காமல் அவள் முன்னால் அவன் ஒரு கவரை நீட்டி

" நான் யாருங்கிறது இருக்கட்டும்..... இது நம்ம கல்யாண பத்திரிக்கை நாளை காலைல சரியா 10 மணிக்கு....இதே கோவிலுக்கு வந்துரு.... எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு " என சொல்லிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பிக்க

மதி அதிர்ந்து போய் நின்றுவிட்டாள் ' பின் சுதாரித்து வேகமாக அவன் பின்னால் ஓடி சென்று அவனை வழி மறைத்து " ஹலோ நில்லுங்க யா.... யாரு நீங்க.. என்ன என்னமோ சொல்லுரிங்க எது பேசுறது இருந்தாலும் வீட்டுல மாமா கிட்ட வந்து பேசுங்க.. இப்பிடி வந்து பேசுற வேலை எல்லாம் வேண்டாம் '

வெண்மதியே என் சகியே[Completed]Where stories live. Discover now