!!17!!

3.1K 96 13
                                    


என்ன சொல்லுறிங்க,என மதி அதிர்ந்து போய் கேட்க அவளுக்கு சந்தியா இன்னும் தன்னை கடத்தி கொல்ல பார்ப்பாள் என்று நம்ப முடியவில்லை பணத்துக்காக இவ்வளோ மட்டாமாக கூட ஒருத்தர் இறங்கி போவாங்களா என்று இருந்தது மதிக்கு சூர்யாவை விட்டு விலகி நின்று என்ன நடந்தது சூர்யா என அவள் கேட்க

சூர்யா எல்லாவற்றையும் அவளுக்கு.. விவரமாக சொல்ல ஆரம்பித்தான் அதை கேட்டுக்கொண்டு இருந்த மதிக்கு அதிர்ச்சி , உடல் சோர்வு எல்லாம் சேர்த்து அவள்..மீண்டும் மயங்கி சரிந்து விட்டாள்

என்ன சத்தம் என்று திரும்பி பார்த்த சூர்யா அதிர்ந்து போனான் கிழே மதி மயங்கி கிடந்தாள் பார்த்த சூர்யா மதி என அலறியே படி வேகமாக அவள் அருகே சென்று என்ன ஆனது இவளுக்கு என்று..அவளை தூக்கி தன் மடியில் அவள் கன்னத்தை தட்ட மதி இடம் எந்த ஒரு அசைவும் அவனின் எண்ணம் எல்லாம் சந்தியா அவளை ஏந்தும் செய்துவிட்டாளா என்று இருந்தது அப்படி மட்டும் எதாவுது நடந்து இருக்கட்டும் சந்தியா உன்னை சும்மா விட மாட்டேன் மனதில் நினைத்து கொண்டான் இப்போது மதி தான் தனக்கு முக்கியம்... என்று அவளை அள்ளிக்கொண்டு ஹோச்பிடளுக்கு சென்றான்....

அங்கே டாக்டர் ராம், சூர்யா மதியே அள்ளிக்கொண்டு ஓடி வருதை பார்த்து பதறி போய் என்ன ஆச்சு சூர்யா மதிக்கு மோர்னிங் நல்லா தானே இருந்தா என கேட்க

" இல்லை டாக்டர் என்னன்னு தெரியலை பேசிகிட்டே இருக்கும் போது அப்படியே மயங்கிட்டா "என அவன் சொல்ல

"என்னது மயங்கிடாளா, இப்பிடி அவள படுக்க வைங்க அப்பிடியே நீங்க கொஞ்சம் வெளியே இருங்க சூர்யா" என சொல்லிவிட்டு அவளை பரிசோதிக்க அவருக்கு ஏதோ புரிவது போல் இருந்தது

வெண்மதியே என் சகியே[Completed]Where stories live. Discover now