மதியின் கையே பிடித்து அழைத்து கொண்டு சூர்யா வெளியே வர மதி.. "
அதை பார்த்து மதி,எனக்கு நடக்க தெரியாதா என்ன கையே விடுங்க என அவள் சொல்ல
" அது எங்களுக்கு தெரியும் கொஞ்சம் பேசாம வரியா , அப்புறம் வெளியே என்ன நடந்தாலும் நீ கண்டுக்க கூடாது நான் சொல்லுற படிதான் செய்யனும் சரியா என அவன் அதட்ட.."
இதுக்கு மேல் பேச அவளுக்கு என்ன பைத்தியமா ,அவன் சொன்னதுக்கு எல்லாம் தஞ்சாவூர் பொம்மை போல் சரி சொல்லிக்கொண்டே பேசாமல் அவனுடன் வந்தாள்
வெளியே வந்தவன் ,நேராக பாணுமாவிடம் நேராக சென்று மதிக்கு நேரம் ஆச்சு பாணும்மா எங்களுக்கு சீக்கிரம் சாப்பாடு பரிமாறுங்க என சூர்யா சொல்ல
அப்போதுதான் அங்கே ஏதும் தெரியாதது போல் வந்த சந்தியா, அவனிடம் ,என்ன சூர்யா இவ்வளோ நேரம் கழிச்சி வந்து கால்ல சுடு தண்ணி ஊத்தின மாதிரி வந்து நின்னா அவங்க எப்பிடி எல்லாம் சீக்கிரம் செய்வாங்க என்ன அவள் ஆரம்பிக்க [ பின்ன காலையில் இருந்து அவனுக்காக காத்துகொண்டு இருப்பவள் அல்லவா , அதோடு சேர்த்து மரகத்தம் பாட்டிடம் திட்டு வேறு வாங்கி கட்டிகொண்டாள் அந்த கோபத்தை இப்பிடி தானே காட்ட முடியும்
அதிகாலை சூர்யா ஜோக்கிங்க்கு வருவான் அவனை பேசி சரி கட்டலாம் என எப்போது போல் பத்து மணிவரையில் உறங்குபவள் இன்று பார்த்து அவனுக்காக தன்னுடையே தூக்கத்தை தியாகம் செய்து வெளியே வந்து பார்த்தவளுக்கு அவன் எழுந்து வந்தது போல் தெரியவில்லை கொஞ்சம் நேரம் பொறுத்து இருந்து பார்த்தவளுக்கு காக்க பொறுமையின்றி சூர்யா அறையே நோக்கி அடி எடுத்துவைக்க அதுக்குள் மரகதம் அவளை பார்த்துவிட்டார்,எப்போதும் தன்னுடையே உணவை அவருடையே அறையிலே எடுத்துகொள்பவர் சந்தியா வந்தவுடன் ஹாலில் அவளை கவனிக்க அமர்ந்துவிட்டார், இது அவர் ஒரு இரவில் எடுத்த முடிவு, இவள் அவனை பார்க்க போக அவரோ, "சந்தியா எங்க போற இந்த நேரத்துல, கேள்விகள் கேட்டு படுத்தி எடுத்துவிட்டார்"
KAMU SEDANG MEMBACA
வெண்மதியே என் சகியே[Completed]
Romansaதுரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது த...