"சென்னையில், மிக பெரிய கல்யாண மண்டபத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க... ஐயர் கெட்டி கெட்டி மேளம் என்று உரக்க சொல்ல" மண்டபத்தில் குழுமியிருந்த பலரின் நல்லாசியுடனும் சிலரின் வெறுப்புகளுடனும் ஆசிர்வாதம் வாங்கி வந்த... அந்த தாலியை, மணமகனிடம் ஐயர் நீட்டவும்...
"கட்டிளம் காளையாய், ஆண்களே பொறாமைப்படும் ஆணழகனாய் கம்பீரமாய் அமர்ந்திருந்தவனின் முகத்திலோ, கல்யாணத்திற்கான சந்தோசம் ஏதும் இல்லாமல் இறுகிப் போய் அமர்ந்திருந்தவனுக்கு... அந்த தாலியை தொட்டதும் உண்டான நடுக்கத்தை சரி செய்தவன், தன் அருகில் இருந்தவளை பார்க்க... அவளோ!
"இந்திரலோகத்து சுந்தரியே, நேரில் வந்தது போல அழகோவியமாய்" தன் மனம் கவர்ந்தவனையே கைபிடிக்க போகும் சந்தோசத்தில் அவளுடைய வதனம் புன்னகையாலும், பொன்னகையாலும், ஜொளித்து கொண்டிருந்த மங்கையவளின்' முகத்தை பார்த்தவனுக்கு! ஏற்கனவே இறுகி இருந்தவனின் மனம், பாறை போல கடினப்பட்டு கொண்டிருக்க... "தீயை தீண்டியது போல் இருந்த, "அவளது அருகாமையில், அவன் கண்களோ செந்தனழை கொப்பளித்து கொண்டிருக்க".. அவனின் பார்வையை தவறாக புரிந்து கொண்ட ஐயரோ!
"தம்பி, என்ன பெண்ணையே பார்க்கறேள்! சீக்கிரம் தாலியை கட்டுங்கோ" நல்ல நேரம் முடியப்போறது என்று சொல்ல... அருகில் நின்றிருந்தவர்கள் களுக்கென சிரிக்கவும்"...
"பெண்ணவளுக்கோ, நாணத்தில் கண்ணம் சிவந்து" குனிந்த தலையை நிமிராமல் இருந்தாள்'.
"ஆனால் அவளின், மணாளனுக்கோ கோபத்தில் கண்கள் சிவக்க! தாலியை கொண்டு போனவன், கழுத்தில் கட்டாமல் விடப்போனவனின் கண்களில் அவனுடைய அம்மாவின் சந்தோசமான முகம் தெரியவும், வேண்டா வெறுப்பாக அவளுடைய கழுத்தில் தாலியை கட்டி மூன்று முடிச்சையும் போட்டான்".
"அதன் பிறகு, நடந்த சடங்குகளை எந்திரம் போல, செய்து முடித்தவன் விடுவிடுவென கீழே இறங்கவும், மங்கையவளின் கல்யாணப்புடவையின் முந்தானை "அவனது, அங்கவஸ்திரத்துடன் இணைத்திருக்க" அவனின் வேக நடைக்கு ஈடுகொடுத்தபடி இவளும் நடந்து போனவளின் மனமோ!
"தன் மனங்கவர்ந்தவனின், திடீர் விலகலுக்கான காரணம், தெரியாமல் பெண்ணவள் தவிக்க"... அதற்கு காரணமானவனோ, எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல நடந்து கொள்ள"... மங்கையவளின் உள்ளமோ கலங்கி தவித்தது".
ஹாய் பிரண்ட்ஸ் சாரி சாரி என்னடா இப்படி பாதில கதையை முடிச்சிட்டேனு நீங்க நினக்கிறது எனக்கு தெரியுது.... ஆனால் நான் என்ன செய்வது பிரண்ட்ஸ்... என்னோட அடுத்த கதையோட சின்ன அறிமுகம் தான் இது... என் வானிலே... நீ வெண்ணிலா...
மன்றம் வந்த தென்றல் கதை முடிந்த பிறகு தான் இந்த கதையை அப்டேட் பன்ன முடியும் சிஸ்... அதுவரைக்கும் காத்திருங்கள் பிரண்ட்ஸ்...
மனசுல கதை உருவான உடனே என்னால வெயிட் பன்ன முடியலை அதான் சின்ன அறிமுகத்தை போட்டுருக்கேன்... என்னுடைய மற்ற கதைகளுக்கு நீங்க கொடுத்த ஆதரவை இந்த கதைக்கும் கொடுப்பிங்கன்ற நம்பிக்கையில் எழுதப்போறேன் பிரண்ட்ஸ்... இது வரைக்கும் நீங்க எனக்கு கொடுத்த சப்போர்டுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் பிரண்ட்ஸ். அதே மாதிரி உங்களோட சப்போர்ட் எனக்கு தொடர்ந்து வேண்டும் பிரண்ட்ஸ்...
இப்படிக்கு அன்புடன்...
ஜோதிராமர்

YOU ARE READING
❤என் வானிலே நீ வெண்ணிலா❤
General Fictionதான் காதலித்தவனையே கரம் பிடித்ததாய் நினைக்கும் நாயகி அவளை மணந்தவன் அவளின் காதலனா? காதலன் இல்லையென்றால் அவன் யார்? தான் கரம் பிடித்தவன் காதலன் இல்லை என்ற உண்மை தெரியவந்தால் அவளின் நிலை என்ன?