அதே நேரம் தன் அம்மா பேசிய கடைசி வார்த்தைகளை கேட்டபடியே வீட்டின் உள்ளே வந்தான் அர்ஜுன். அவன் காதுகளில் அந்த வார்த்தைகள் திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டு இருந்தது. என் மகனுக்காகவே யோசித்து இத்தனை வருடமா பிரிந்து இருந்தவள் அவளை விட நல்ல பெண்ணை உங்களால காட்ட முடியுமா? இது என்ன அம்மா இப்படி சொல்றாங்க! அர்ஜுனின்(கிருஷ்ணா) மனது குழப்பம் அடைந்தது.
டேய், டேய் அர்ஜுன் என்னடா நடக்குது இங்கே? அம்மா ஏன் சத்தமா பேசுறாங்க!! என்று அவனின் தோளை பற்றி உலுக்க, அதில் நிகழ்வுக்கு வந்த அர்ஜுன்,
நானும் உன்னோடு தானேடா உள்ளே வந்தேன், எனக்கு மட்டும் தெரியுமா என்ன? என அர்ஜுனும் சிடுசிடுக்க,
ம்ஹூம் பெருசா பேச வந்துட்டான் இந்த வீட்டை பார்த்தா மேரேஜ் நடந்த வீடு மாதிரியா இருக்கு என வாய்க்குள் முனுமுனுத்துக் கொண்டிருக்க...
அதே நேரம் மேலே அறையிலிருந்து, தேவா தேவா என்று இளாவின் குரல் பதற்றமாக ஒலிக்கவும்,
டேய் மச்சி, என்று சந்தோஷ் அதிர்ச்சியுடன் திரும்ப, அங்கே அர்ஜுன் இருந்த இடம் காலியாக இருந்ததை கண்டவன், ச்சே என்று வேகமாக மாடிக்கு சென்றான்.
இளாவின் சத்தத்தை கேட்டு ரங்கநாயகியின் அறையில் இருந்த கைலாஷும் அம்பிகையுமே அதிர்ச்சியுடன் மாடியை நோக்கி வேகமாக சென்றனர்.
வேகமாக அறைக்குள் ஓடிவந்த அர்ஜுனிடம், அண்ணா தேவா தேவா என்று பதற்றமும் அழுகையுமாக சொல்ல,
இளா என்ன ஆச்சி? என்ற அர்ஜுன் தேவாவை கண்களால் தேடியபடி தவிப்புடன் கேட்க,
அண்ணா!! தேவா ரூமுக்குள்ள போய் கதவை லாக் பன்னிக்கிட்டா!! நான் அவளை கூப்பிட்டும் திறக்க மாட்டேங்குறா? எனக்கு ரொம்ப பயமா இருக்கு, அவள் ஏதாவது தவறான முடிவை எடுத்துடுவாளோனு, என பதறியபடி சொல்ல, அறைக்கு முன்னால் நின்றவன்,
நிலா நிலா என தன்னை மறந்து பதற்றமாக கத்தியபடி, கதவை வேகமாக தட்டினான் அர்ஜுன். பல முறை அழைத்த பிறகும் மூடிய கதவு மூடியபடியே இருக்க, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றவன் அதிர்ச்சியில், உறைந்து நின்றான்.
VOUS LISEZ
❤என் வானிலே நீ வெண்ணிலா❤
Fiction généraleதான் காதலித்தவனையே கரம் பிடித்ததாய் நினைக்கும் நாயகி அவளை மணந்தவன் அவளின் காதலனா? காதலன் இல்லையென்றால் அவன் யார்? தான் கரம் பிடித்தவன் காதலன் இல்லை என்ற உண்மை தெரியவந்தால் அவளின் நிலை என்ன?