ம்மா இன்னமும் இது தேவையா? என அருகில் நின்றிருக்கும் தேவாவின் காதில் விழாதாவாறு அர்ஜுன் மெதுவான குரலில் அம்பிகையிடம் கேட்கவும்!!
எதை கேட்கிற அர்ஜுன் என்று புரியாமல் கேட்ட தன் அம்மாவிடம், இதைத்தான் என கண்களால் காண்பித்தான்.
தன் கழுத்தில் இருந்த மாலையையும் நெற்றியில் இருந்த பட்டத்தையும் சுட்டிக் காட்டிய மகனிடம்,
நோ வே ஆதி!! இப்போதைக்கு நீ இத கழட்ட கூடாது. வீட்டுக்கு போய் சேரும் வரைக்கும் இப்படியே தான் இருக்கனும் என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டு நகர்ந்தார்...
கீழே குனிந்தபடி அம்மா மற்றும் பிள்ளையின் பேச்சை கேட்ட தேவாவின் உதட்டில் சிறு புன்னகை வெளிப்பட அர்ஜுனின் முகம் இருண்டது.
தன்னவனின் முகத்தை நிமிர்ந்து பார்க்க துடித்த மனதை கட்டுப்படுத்தியவளுக்கு முடியாமல் போகவும், ஓரவிழியால் அர்ஜுனின் முகத்தை பார்த்த தேவாவின் முகத்தில் இதுவரை ஒட்டியிருந்த புன்னகையும், மறைந்தது.
டேய் அர்ஜு நீ ரொம்ப பன்றடா? என் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்க மாட்டேங்கிற, அவ்வளவு கோபமா என்மேல, "உனக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாதுனு தானே நான் அப்படி ஒரு முடிவை எடுத்தேன் என நினைக்கும் போதே, அன்றைய நாளின் நினைவில் அவளுடைய பூ உடல் நடுங்க" இதயத்தின் ஓரத்தின் தாங்க முடியாத வலியை உணர்ந்தவளின் பார்வை தன் நெஞ்சில் தொங்கிக் கொண்டிருக்கும் பொன் மஞ்சள் தாலியை பார்த்ததும், தேவாவின் இதழ் புன்னகையை சிந்த கூடவே அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் முத்துக்கள் இரண்டு விழுந்தது.
அர்ஜுவின் முகத்தை ஏக்கமாய் பார்த்தவள், ஒரு முறை ஒரே முறை எனக்காக எல்லாமாமும் நீ இருப்பேன்னு வாயால சொல்ல வேண்டாம் அர்ஜு! உன்னோட ஒற்றை பார்வையே போதும்டா, என மானசீகமாய் தன்னவனுடன் பேசிக் கொண்டிருந்தாள் தேவா.
தேவா!! ஏய் தேவா?? என்ற இளாவின் அழைப்பில் நிகழ்வுக்கு வந்தவளோ, என்ன என்பதாய் அவளை பார்க்க, இடுப்பில் கையை வைத்துக் கொண்டு முறைத்தபடி என்னடி இது கண்ணை திறந்துக் கொண்டே கனவு காண்கிறாயா? என கேட்க, தேவாவின் முகம் அந்திவானமாய் சிவந்தது.
BẠN ĐANG ĐỌC
❤என் வானிலே நீ வெண்ணிலா❤
Tiểu Thuyết Chungதான் காதலித்தவனையே கரம் பிடித்ததாய் நினைக்கும் நாயகி அவளை மணந்தவன் அவளின் காதலனா? காதலன் இல்லையென்றால் அவன் யார்? தான் கரம் பிடித்தவன் காதலன் இல்லை என்ற உண்மை தெரியவந்தால் அவளின் நிலை என்ன?