மணமக்களின் கார் ஒரு பிரமாண்டமான கோட்டை சுவர் போல அமையப்பெற்ற கேட்டின் முன்பு வந்து நிற்கவும், கதவுகள் சட்டென திறக்கப்பட, காரும் மெதுவாக உள்ளே நுழைந்தது.
கார் செல்லும் பாதையின் இரண்டு பக்கமும், பூக்களாலும், மாவிலை தோரணங்களாலும், அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்ததை விழிகள் விரிய பார்த்துக் கொண்டே வந்தாள் தேவா.
அர்ஜுவின் மாளிகை போன்ற வீட்டை பார்த்த உடனே பிரமித்து போனவள்... கேட்டில் இருந்து வீட்டிற்கு, காரில் பயணம் செய்யும் போதே" ஐந்து நிமிடங்கள் ஆகும் போல இருக்கே, அப்போ நடந்து செல்ல எவ்வளவு நேரம் பிடிக்கும் என்று" கார் வீட்டை அடைந்தது கூட தெரியாமல் தன் மனதுக்குள் கணக்கிட்டு கொண்டிருந்தாள் தேவா.
அர்ஜுனின் பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய சொந்த பந்தங்கள் அனைவரும், மணமக்களை வரவேற்க வாயிலுக்கே வந்து நின்றிருந்தனர். அவர்களுக்கு அருகே ஒரு நாற்காலியில் அர்ஜுனின் பாட்டியும் அமர்ந்திருந்தார். வயதின் மூப்பு காரணமாக மண்டபத்திற்கு வராமல் இருந்தவர், தன் பேரனின் மனைவியை காண ஆவலுடன் காத்திருந்தார்.
கார் நின்றதும், சந்தோஷ் மற்றும் இளாவும் அங்கே குழுமியிருக்கும் நெருங்கிய சொந்தங்களைப் பார்த்ததும் வேகமாக இறங்கிவிட, அர்ஜுனும், தன் பாட்டியை பார்த்தமாத்திரத்தில் தேவாவை விடுத்து கீழே இறங்கி அவர் அருகே சென்று நின்றான்.
தன் பேரனின் கல்யாணக் கோலத்தை பார்த்து அந்த வயது முதிர்ந்தவரின் சுருங்கிய கண்ணங்கள் பூரிப்பில் விரிந்தது.
அர்ஜுனின் முகத்தை தன் கைகளில் ஏந்தி கண்களில் நிரப்பிக் கொண்டவர், அவனின் சிகையை ஆதூரமாக வருடியவரின் பார்வை தன் பேரனின் பின்னால் சென்றது.
அவரின் பார்வை சென்ற பிறகே, தன்னருகில் அவள் இல்லாததை அறிந்தவன், மகாராணி காரில் இருந்து இறங்க மாட்டாளா என மனதுக்குள் கருவியவன், பாட்டியின் பார்வையை பார்க்காமல் தவிர்த்தான்.
CZYTASZ
❤என் வானிலே நீ வெண்ணிலா❤
General Fictionதான் காதலித்தவனையே கரம் பிடித்ததாய் நினைக்கும் நாயகி அவளை மணந்தவன் அவளின் காதலனா? காதலன் இல்லையென்றால் அவன் யார்? தான் கரம் பிடித்தவன் காதலன் இல்லை என்ற உண்மை தெரியவந்தால் அவளின் நிலை என்ன?