தேவா பால்ப்பழ டம்பளரை கீழே போட்டதும், அங்கிருந்த சொந்தபந்தங்களின் சலசலப்பு அதிகரிக்க!!!
இதுவரை தேவாவைப் பற்றிய நன் மதிப்புடன் இருந்த ரங்கநாயகி பாட்டிக்கு அவளுடைய இச்செய்கையினால் கோபம் எழ, அம்பிகை என்று அர்ஜுனின் அம்மாவை சத்தமாக அழைக்கவும், மற்றவர்கள் அமைதியடைந்தனர்.
அத்தை என்று அவர் அருகில் வந்து நின்ற அம்பிகையிடம் தனது அதிருப்தியின்மையை கண்களில் காட்டினார்.
தேவாவின் உடல் நடுக்கத்தை பார்த்ததும் இளா அவளுடைய தோளைப் பற்றவும், கலங்கிய கண்களுடன் தன் தோழியை பார்த்தவள், இப்படி ஆகிவிட்டதே என கண்களால் மௌன மொழியில் பேச,
தேவா ப்ளீஸ்ம்மா நான் உன்னை நம்புறேன் நீ வேண்டுமென்றே செய்திருக்க மாட்ட என அவளுக்கு மட்டும் கேட்கும் படி சொல்லவும்,
இளாவின் முகத்தை பார்த்து விரக்தியான புன்னகையை சிந்தினாள். முதல் கோணல் முற்றிலும் கோணல்னு அம்மா அடிக்கடி சொல்வாங்களே, இப்போ அதே மாதிரி பாட்டிக்கு என் மேல தப்பான அபிப்ராயம் தானே வந்து இருக்கு என மருகியவள் திடிரென அர்ஜுனின் மீது சரிந்தாள்.
எதையாவது செய்து இவளை பாட்டியின் முன்பு, மாட்டிவிட வேண்டும் என மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்த அர்ஜுனுக்கே தேவாவின் செய்கையில் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான். ஓரக்கண்ணால் தேவாவின் முகத்தை பார்த்தவனுக்கு அவளுடைய கலங்கிய விழிகளை கண்டதும், அவன் மனதை எதுவோ செய்வதை போல இருக்க" அதே நேரம் தன் பாட்டியின் கோபக்குரலில் சுயநினைவுக்கு வந்தவன், ம்ம் பரவாயில்லையே நாம செய்ய நினைக்கிறதுக்கு முன்னால அதுவாவே நடக்கிறதே, ம்ம் என்ன நடக்கிறதுனு பார்க்கலாம் என நினைத்து அமைதியடைந்தவனின் தோள்களிலே பூமாலையாய் வந்து விழுந்தவளை பார்த்ததும் ஒன்றுமே புரியாமல், அதிர்ந்தவன், அவளை பற்றியிருந்த கைகளில் அவள் உடுத்தியிருந்த பட்டுச்சேலைக்கு நிகராக சிவப்பான திரவம் பிசுபிசுப்பாக இருப்பதை கண்டவன், சந்தோஷ் டாக்டர் அங்கிளுக்கு போனை போடுடா? என்று கத்திவிட்டு தேவாவை தன் கைகளில் தாங்கியபடி மாடியில் இருக்கும் தன்னுடைய அறைக்கு வேகமாக சென்றான். அருகில் இதுவரை கவலையுடன் நின்றிருந்த இளாவிற்கு எதுவுமே புரியாமல் பதற்றத்துடன் அர்ஜுனை பின்தொடர்ந்து சென்றாள்.
VOCÊ ESTÁ LENDO
❤என் வானிலே நீ வெண்ணிலா❤
Ficção Geralதான் காதலித்தவனையே கரம் பிடித்ததாய் நினைக்கும் நாயகி அவளை மணந்தவன் அவளின் காதலனா? காதலன் இல்லையென்றால் அவன் யார்? தான் கரம் பிடித்தவன் காதலன் இல்லை என்ற உண்மை தெரியவந்தால் அவளின் நிலை என்ன?