❤என் வானம்❤-11
"அர்ஜுனின், காரை இடித்ததும், அந்த இடத்தில் இருந்து, வேகமாக சென்ற லாரியை தொடர்ந்து, பின்னாலேயே ஒரு கார் வந்து நின்றது.
காரில் இருந்தவன், ஆக்சிடென்ட் ஆனா காரை பார்த்ததும், சட்டை பாக்கெட்டில் இருந்த, தன்னுடைய மொபைலை எடுத்து உடனே போன் செய்தான்.
"எதிர்பக்கம் எடுக்கப்பட்டதும், "ஐயா, வேலை முடிஞ்சிடுச்சி! இரண்டு பேரும் உயிரோட இருக்க சான்ஸே இல்லை என சொல்லவும்,
டேய், உண்மையை தானே சொல்ற? என்று தர்மாவின், கர்ஜனை குரல் கேட்க"
உண்மைங்க ஐயா, கார் தீ பற்றி எரியுறத என் கண்ணால தான் பார்த்துட்டு சொல்றேன் என்க.,
சரி சரி சீக்கிரம் அந்த இடத்தில் இருந்து உடனே கிளம்பு, கட்டளையாக ஒலித்தது தர்மாவின் குரல்,
இதோ கிளம்பிட்டேனுங்க ஐயா என்று பவ்யத்துடன் சொல்ல,
"டேய், உன்னை யாரும் பார்க்கில தானே! என தர்மா கர்ஜிக்க"
ஐயா, யாருமே பார்க்கல, இந்த பக்கம் ஒரு ஈ காக்கா கூட வரலைங்கயா என்றதும்,
சரி சரி உடனே கிளம்பிடு என்ற தர்மா, தன்னுடைய மொபைலை அணைத்து விட்டு, டேய் என்று குரல் கொடுக்க…
நாலைந்து பேர் தர்மாவின் முன்னால் வந்து நின்றனர்.
டேய் அந்த லாரி டிரைவரை முடிச்சிடுங்க... கூடவே அந்த லாரியை உருத்தெரியாமல் அழிச்சிடு… அந்த நம்பர்ல ஒரு லாரி இருந்ததாகவோ, எந்த ஆதாரமும் இருக்க கூடாது என்க,.
சரிங்க ஐயா என சொல்லிவிட்டு அவர்கள் நகரவும், வேகமாக வந்தான் சுரேஷ்.
சார் சார் போலீஷ் இன்ஸ்பெக்டர் வந்துருக்கார் உங்களை என்கொய்ரி பன்னனுமா?
வாட்?? என்னை என்கொய்ரி பன்னனுமா? எவனுக்குடா இவ்ளோ தைரியம், அதுவும் என்னையே கேள்விக் கேட்க! என்று உறுமிய தர்மாவை பார்த்து நடுங்கினான் சுரேஷ்.
ČTEŠ
❤என் வானிலே நீ வெண்ணிலா❤
Beletrieதான் காதலித்தவனையே கரம் பிடித்ததாய் நினைக்கும் நாயகி அவளை மணந்தவன் அவளின் காதலனா? காதலன் இல்லையென்றால் அவன் யார்? தான் கரம் பிடித்தவன் காதலன் இல்லை என்ற உண்மை தெரியவந்தால் அவளின் நிலை என்ன?