இணை பிரியாத நிலை பெறவே -1

10.5K 218 63
                                    

காலை 6மணிக்கு எழுந்தாள் நம்முடைய கதாநாயகி பரபரப்பாக இருந்தாள்

நிரஞ்சனா :என்ன மேடம் நேத்து லேட்டா வந்திங்க இண்ணைக்கு சீக்கிரமா எழுந்துட்ட என்ன ஆச்சு இண்ணைக்கு லீவ் தானே

சீதா :இல்ல டி ஏதோ புது கிளையண்ட் வறாராம் அதான் ஒரு ப்ரெசென்ட்டேஷன் இருக்கு அதுக்குத்தான் நேத்து வேற ரொம்ப நேரம் ஆச்சு. பேசாம வேலையை விட போறேன் டி. பக்கத்துல இருக்கிற ஸ்கூலுக்கு வேலைக்கு போறேன்.

நிரஞ்சனா :என்ன டி விளையாட்டா 50,000 வேலையை விட்டுட்டு 5,000 வேலைக்கு போறேன்னு சொல்ற

சீதா :அட போடி தினமும் டென்ஷனான இந்த வேலைக்கு அந்த வேலை எவ்ளோவோ பெட்டெர். அதோட வீட்டு கடனை அடைக்கத்தான் வேலைக்கே போனேன் இப்போ என்னோட படிப்புக்கு வாங்குன கடனும் அடைச்சாச்சு அப்பா கடையும்(மளிகை கடை ) நல்ல நிலைமையில் இருக்கு அதான் யோசிக்கிறேன் வேலையை விட்டுரலாம்னு

நிரஞ்சனா :சரி விட்டுடு நானும் வேலையை விட்டுடறேன் எனக்கும் இந்த டென்ஷனான ஐ டி வாழ்க்கை பிடிக்கல நானும் டைலரிங் பண்ணலாம்னு இருக்கேன்

சேகர் :என்னமா காலையிலேயே வேலையை விடறதை பத்தி பேச்சு ஓடுது

சீதா :இல்லப்பா இது ரொம்ப மனஉளைச்சலை தருது அதான்பா வேலையை விட்டுடலாம்னு இருக்கோம்

நிரஞ்சனா :ஆமாப்பா வேலையை விட்டுடலாம்னு இருக்கோம்

சேகர் :சரிம்மா மனசுக்கு பிடிக்காத வேலையை செஞ்சா அது முழுமையா செய்ய முடியாம அரைகுறையா இருக்கும் நீங்க வேலையை விடறது பத்தி கவலை இல்ல இப்போ கடையிலயும் நிலைமை நல்லாத்தானே இருக்கு. உங்களுக்கு பிடிச்ச வேலையை பாருங்க. ஆனா வேலை பாருங்க படிச்ச படிப்பு நாலு பேருக்கு பயன்படட்டும் அம்மாகிட்டயும் ஒரு வார்த்தை கேளுங்க

சுப்ரதா :நான் எப்போவோ வேலையை விட சொன்னேன் நீங்கதான் லேட்

சீதாவும் நிரஞ்சனாவும் தங்கள் பெற்றோரை கட்டிப்பிடித்து நன்றி கூறினர். பணம் மேல ஆசையே இல்லமா இருக்குற பெத்தவங்க கிட்ட வளந்த இவங்களுக்கு பணம் மேல ஆசை வருமா நெவெர். சேகர் ஏழையா இருந்தாலும் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பை கொடுத்தார். அவர்களும் பெற்றோரின் துன்பத்தை அறிந்து படித்து இன்று ஐ டி கம்பனியில் நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கின்றனர். இப்போது குடும்ப நிலமை சரி ஆனதால் மனஉளைச்சல் தரும் வேலையை உதற முடிவு செய்து விட்டனர்

இணை பிரியாத நிலை பெறவே Where stories live. Discover now