ராம் வருகைக்காக உறங்காமல் காத்துகொண்டு இருந்தாள் சீதா ராம் வர இரவு வெகு நேரம் ஆகி விட்டது
ராம் :என்ன சீதா இன்னும் தூங்கலயா
சீதா :இல்ல அப்பு உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன் சாப்பிட்டீங்களா
ராம் :நான் சாப்பிட்டேன்
சீதா :சாப்பிட்டீங்களா
ராம் :ஆமா ஏன்
சீதா :இல்ல பொதுவா நான் பரிமாறினா தானே சாப்பிடுவீங்க
ராம் :ஆமா ஆனா இப்போவே பழக ஆரம்பிக்கிறேன் சீதா நீ இல்லாம வாழ
சீதா கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது
ராம் :ஹே அழாத சீதா கஷ்டமா இருக்கு உன்ன கஷ்ட படுத்த சொல்லல நீ வேண்டாம்ன்னு சொல்லு நோ டிவோர்ஸ் காலம் முழுக்க நாம சந்தோசமா இருக்கலாம்
சீதா :இல்ல வேண்டாம் நாம பிரியிரதுதான் சரியா இருக்கும்
ராம் :நீ இவ்ளோ சொல்ற சரி நம்ம இனி இதை பத்தி பேச வேண்டாம் இருக்குற கொஞ்சம் நாள் ஏன் அழுதுட்டே இருக்கணும் நல்லா சந்தோசமா இருக்கலாம்.
சீதா :ஹ்ம்ம்
ராம் உறங்க சென்றுவிட்டான் ராம் நிம்மதியாக உறங்க சீதாவிற்கு ரணமான மனதை சாந்த படுத்த அவள் நினைவில் கடந்த கால நினைவுகள் வந்து போனது.
Flash back
அன்றைய தினம் ராம் வீட்டிற்கு சீக்கிரம் வந்திருந்தான்
ராம் :சீதா சீதா
சீதா :சொல்லுங்க அப்பு
ராம் :அம்மா அப்பா எங்க
சீதா :ஆசிரமத்துக்கு போயிருக்காங்க சோ நாளைக்கு தான் வருவாங்களாம் உங்க கிட்ட சொல்லசொன்னாங்க
ராம் :ஓ அப்போ வீட்ல நீயும் நானும் மட்டும்ன்னு சொல்லு
ராம் சீதாவிடம் நெருங்கி வர
சீதா :இங்க பாருங்க அப்பு நம்ம ரூம்ல இல்ல ஹால்ல இருக்கோம் இங்க வீட்ல வேலை செய்றவங்க
எல்லாரும் வந்து போய்ட்டு இருப்பாங்க சோ என்னோட அப்பு இப்போ ரூம்க்கு போங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் முடிசிட்டு வந்துருவேன்
YOU ARE READING
இணை பிரியாத நிலை பெறவே
Non-Fictionஅளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு