ராமும் சீதாவும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
சேகர் :வாங்க மாப்பிள்ளை வாம்மா நல்லா இருக்கிங்களா. அம்மாடி சுப்ரதா காபி போடு மா.
ராம் :ஐயோ மாமா அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் நீங்க கொஞ்சம் உக்காருங்க. நீங்களும் உக்காருங்க அத்தை.
நிரஞ்சனா :நான் எல்லாம் அப்போ மாமா கண்ணுக்கு தெரியமாட்டேனே.
ராம் :நீ சின்ன பொண்ணு அதான் கண்ணுக்கு தெரிய மாட்டேங்கிற
நிரஞ்சனா :ஆமா நான் சின்ன பொண்ணுதான் ஆனா அந்த ஸ்ரீராமருக்கே உதவின சின்ன அணில் மாதிரி
சீதா :என்ன டி உதவி பண்ண
ராம் சொல்லாத என்று சைகை செய்ய அதை கவனிக்காத நிரஞ்சனா சீதாவிடம் சொல்வதாக சொல்லி ரூமிற்கு அழைத்து சென்றாள்.
சீதா :என்ன டி சொல்லு என்ன உதவி பண்ண அவருக்கு
நிரஞ்சனா :சரி என்கிட்ட சொல்லு உனக்கும் மாமாக்கும் எதாவது சண்டையா
சீதா :இல்ல ஏன் கேக்குற
நிரஞ்சனா :நிஜமா
சீதா :என்ன பாத்தா எப்படி தெரியுது உனக்கு
நிரஞ்சனா :அக்மார்க் பொண்டாட்டி மாதிரி தெரியுது.
சீதா :வாட்
நிரஞ்சனா :முன்னாடி எல்லாத்தையும் என்கிட்ட ஷேர் பண்ணுவ ஆனா இப்போ கல்யாணம் ஆன பிறகு ஒண்ணும் சொல்ல மாட்டுற பர்சனல் எல்லாம் வந்துடிச்சி உனக்குன்னு
சீதா :ஏன் இப்டி பேசுற . நான் சண்டை போட்டா பெட்டியோட தனியா வந்திருப்பேன் ஆனா இப்போ அவர்கூடதான சிரிச்சு பேசிட்டு வந்தேன். சரி இப்போ உன்னோட இந்த சிஐடி மூளைக்கு ஓய்வு குடுத்துட்டு அவருக்கு என்ன ஹெல்ப் பண்ணேன்னு கேட்டு சொல்லு
நிரஞ்சனா :அதுவா மாமா காலையில கால் பண்ணி என்கிட்ட உன்ன சண்டை போட்டா எப்படி சமாதான படுத்துவேன்னு கேட்டாரு.
சீதா :நீ என்ன சொன்ன
நிரஞ்சனா :உன்ன சமாதான படுத்துறது என்ன பெரிய விஷயமா சாரி கேட்டா போதும் அதோட நீ சந்தோசப்படணும்னா கருணை இல்லத்துக்கு எதாவது ஹெல்ப் பண்ணா போதும்னு சொன்ன.
YOU ARE READING
இணை பிரியாத நிலை பெறவே
Non-Fictionஅளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு