சீதாவும் ராமும் ஓரளவிற்கு பேச ஆரம்பித்திருந்தனர். இப்படியே ஒருவாரம் சென்றது.
சீதா :என்னங்க
ராம் :சொல்லு
சீதா :இல்ல அம்மா அப்பாவை பாக்கணும் போல இருக்கு வீட்டுக்கு போயிட்டு வரவா
ராம் :போயிட்டு வா வேணும்னா இண்ணைக்கு நீ அங்கேயே தங்கு நான் போய் உன்ன ட்ராப் பண்ணிட்டு வரேன்.
சீதா: உங்களுக்கு கோபமா
ராம் :நான் ஏன் கோப பட போறேன்.நானே உன்னை ட்ராப் பண்ணறேன் நீ போய் அம்மா அப்பாகிட்ட சொல்லிக்கோ
சீதா :தேங்க்ஸ்.
ராம் :நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும் ஏன் தெரியுமா உன் தொல்லை இல்லாம ஒரு நாள் இருக்கலாம் இல்ல
சீதா :அதானே எனக்கே கொஞ்சம் சந்தேகம் வந்துடிச்சி இது என்னோட ராம்தானா ஆனா இப்போ கிலியர் ஆயிடுச்சு நீங்க என்னோட ராம்தான்
ராம் :உன்னோட ராம்மா
புருவத்தை சற்று உயர்த்தி கேட்டவனை பார்க்க முடியாமல் தவித்தாள் சீதா
சீதா :நான் ஏதோ பேச்சு வாக்குல சொல்லிட்டேன் அத்தை என்ன கூப்பிடுறாங்க நான் போறேன்
ராம் :என்ன ஆச்சு இவளுக்கு
சிறிது நேரத்திற்கு பிறகு ராமுடன் கிளம்பினாள் சீதா.மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்.
ராம் :இண்ணைக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமா என்னோட பெட்ல நான் மட்டும் நிம்மதியா தூங்குவேன் ஐயோ நினைச்சு பாக்கவே அவ்ளோ சந்தோசமா இருக்கு. இன்னைக்காவது உன்னோட இடி இல்லாம தூங்கலாம்.
சீதா :நானும் இண்ணைக்கு நிம்மதியா இருப்பேன்.நிம்மதியா தூங்குவேன் உங்க தாடி குத்தி எத்தனை நாள் எழுந்திருக்கேன் தெரியுமா அது தாடி இல்ல புதர் காடு.
YOU ARE READING
இணை பிரியாத நிலை பெறவே
Non-Fictionஅளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு