நாளைக்கு பிறந்தநாள் ராமிற்கு
ஜானகி :அம்மாடி நம்ம ராமிற்கு நாளைக்கு பிறந்தநாள்
சீதா :தெரியும் அத்தை கோவிலுக்கு அன்னதானம் , தானம் தர்மம் எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு
ஜானகி :சரிம்மா
சிறிது நேரம் ஜானகியுடன் பேசிவிட்டு ரூமிற்குள் வந்தாள்
ராம் :ஹே ஒரு நிமிஷம் நில்லு
சீதா :சொல்லுங்க எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு
ராம் :இந்தா இந்த டிரஸ் நாளைக்கு போட்டுக்கோ
சீதா டிரஸ்சை பார்த்தவள் அதிர்ந்து போனாள். அது மாதிரி உடைகளை சீதா அணிந்ததே இல்லை.
சீதா :இது எனக்கு பழக்கம் இல்லாதது சோ என்னால முடியாது.
ராம் :பழகிக்கோ
சீதா :இங்க பாருங்க நான் என்ன டிரஸ் போடணும்னு நீங்க சொல்லாதீங்க நான் என்ன போடணும்னு எனக்கு தெரியும்.
ராம் :இங்க பாரு நான் ஒண்ணும் உன் மேல பாசம் அதிகமாகி இதை வாங்கலை. அதோட உன்னோட அழகை ரசிக்கவும் வாங்கலை. என்னோட பிசினஸ் பார்ட்னர்ஸ் நிறைய பேர் நாளைக்கு ஒரு பார்ட்டி அரேன்ஞ் சோ நீ நாளைக்கு என்னோட ஸ்டேண்டர்டுக்கு இணையா இருக்கணும்னு நினைக்கிறேன். அப்புறம் நீ மட்டும் நாளைக்கு இந்த டிரஸ்ஸை போடலன்னா நாளைக்கு பார்ட்டிக்கு கண்டிப்பா போக மாட்டேன் இந்த பார்ட்டிக்கு அட்டென்ட் பண்ணலைனா என்னோட முக்கியமான டீல் என்ன விட்டு போய்டும். நான் கவலை பட்டா அம்மாவும் கவலை பாடுவாங்க யோசிச்சுக்கோ.
சொல்லிவிட்டு அவளுடைய பதிலுக்கு கூட காத்திராமல் சென்று விட்டான். சீதா அந்த உடையில் தன்னை நினைத்து பார்த்தாள் அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
கற்பனை
VOUS LISEZ
இணை பிரியாத நிலை பெறவே
Non-Fictionஅளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு