செல்லும் வழியில் சீதாவிடம் நடந்த அனைத்தையும் கூறினான் சீதா இப்பொழுது அதிர்ச்சியானாள் மனதிற்குள் வேண்டிக்கொண்டாள்.
நிரஞ்சனாவிற்கு எதுவும் ஆக கூடாது என்றுராம் சீதா ஜெய் மூவரும் மகிஷா சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தனர். எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் அவர்கள் வந்தது மருத்துவமனைக்கு.
மூவரும் தாமதிக்காமல் உள்ளே சென்றனர்.
நர்ஸ் :நீங்க ஜெய் தானே உடனே மேல வாங்க
ஜெய் :உங்களுக்கு எப்படி என்ன தெரியும்
நர்ஸ் :எங்க மகிஷா மேடம் தான் நீங்க வருவீங்கன்னு சொன்னாங்க என்கிட்ட வேற எதுவும் கேட்காதிங்க
மூவரும் அவரை பின் தொடர்ந்து செல்ல ஜெய்க்கு ஒவ்வொரு அடியும் நெருப்பில் வைப்பது போல இருந்தது.
நர்ஸ் :இந்த ரூம்க்கு போங்க சார்
ஜெய் ரூமில் நுழைந்த பிறகுதான் அவனுக்கு உயிர் வந்தது அவனுடைய உயிரை சுமப்பவள்
உள்ளே அமர்ந்திருக்க அவளின் அருகே பாட்டி தாத்தா பெட்டில் படுத்திருந்தனர்.நிரஞ்சனாவை சென்று அணைத்தவன் நெற்றியில் முத்தம் பதித்தான்
நிரஞ்சனா :ஜெய் ஜெய் வந்துட்டியா எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்ன விட்டுட்டு எங்கயும் போகாத ப்ளீஸ் ப்ளீஸ்
ஜெய், :போமாட்டேன் கண்டிப்பா போக மாட்டேன்
ராம் :நிரஞ்சனா என்ன ஆச்சு ஏன் இங்க இருக்கீங்க பாட்டி தாத்தாக்கு என்ன ஆச்சு
ஜெய் :சொல்லுமா என்ன ஆச்சு அந்த மகிஷா எதாவது பண்ணாளா
நிரஞ்சனா :அவங்களாலதான் நான் இப்போ உயிரோட இருக்கேன் நம்ம குடும்பம் உன் முன்னாடி இருக்கு
ஜெய் :என்ன சொல்ற.
சீதா :என்ன நடந்துச்சு
நிரஞ்சனா :நீ வீட்டுக்கு வரேன்னு சொல்லிட்டு எங்க போன
ஜெய் :இல்ல வர்ற வழியில ஒரு ஆக்சிடேன்ட் ஒரு சின்ன குழந்தை அடி பட்டுடிச்சு அதோட அம்மா அப்பா என்கிட்ட ஹெல்ப் கேட்டாங்க சோ நான் ஹாஸ்பிடல் போய்ட்டு வீட்டுக்கு வந்தேன் ஆனா வீடே வேற நிலைமைல இருந்துச்சு
YOU ARE READING
இணை பிரியாத நிலை பெறவே
Non-Fictionஅளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு