இதயம் 8

1K 26 1
                                    

சிரித்துக்கொண்டிருந்தவனை பார்த்து முறைத்தவள்

பக்கத்தில் அவனை அடிக்க ஏதாவது கிடைக்கிறதா என்று சுற்றும் முற்றும் தேடினால்

அவள் முறைத்தலும் நிஜமாக அவனால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை சிரிப்புடனே என்ன பல்லவி என்ன அடிக்க கல்லு ஏதாவது கெடைக்குதான்னு பாக்குறிய அதுலாம் கெடைக்காது இது புல்லா டைல்ஸ் எந்த கல்ல வச்சு அடிப்ப என்றான்

அவர்கள் நின்று பேசிக்கொண்டிருந்த இடம் காலேஜ் பார்க்கிங் என்பதால் ஒரு சில பைக் and சைக்கிள்கள் இருந்தது

அவனிடம் ஹான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் மாதிரி எனக்கு சைக்கிள் செயினும் ஆயுதம் தான் என்றவள் பக்கத்தில் நின்று கொண்டிருந்த சைக்கிள் செயினை இழுக்க அவள் கைக்கு அது மொத்தமாக வந்தது அதை கையில் சுற்றிக்கொண்டு அவனை தாக்க ரெடியாக அதற்க்கு அவன் அங்கே இருந்தால் தானே

அய்யயோ காப்பாத்துங்க என்று கத்திகொண்டே அவள் சைக்கிள் செயினை அவிழ்க்கும்போதே அங்கிருந்து ஓடிவிட்டான்

அவன் ஓடுவதை பார்த்தவள் ஓடிட்டியா நீ எங்க ஒடுநாளும் உன்ன விட போறதுல இல டா நீ இன்னக்கி கைமா தான் என்று கூறிக்கொண்டே அவள் துரத்த ஆரம்பித்தாள்

ஒரே எட்டில் அவனை பிடித்தவள் அவன் முடியை கொத்தாக பிடித்து என்னடா சொன்ன தெரிஞ்சே புதர்க்குழில விழுவங்களான புதர்குழிய விட கொடூரமானது ட்ரெனேஜ் அதுல தள்ளி விற்றேன்

அப்றம் என்ன கட்டிக்க போறவருக்ககா தினமும் கடவுள் கிட்ட வேண்ட்ரியா எனக்கும் உன்ன மாறி இல்லாம நல்ல மாப்பிளை கெடைக்கணும்னு அதே கடவுளுக்கு  மொட்டை அடிச்சி அழகுகுத்தி தீச்சட்டி தூக்க வைக்கிறேன் டா

அப்றம் இன்னும் இன்னும் ஏதோ சொன்னியே ஹான் ஞாபகம் வந்துருச்சி என்ன டா சொன்ன அடக்கமான பொண்ணு வேணுமா சுடுகாட்டுக்கு போடா அங்க நீ எதிர்பாக்குற பொண்ணு இருப்ப என்று ஒவ்வொன்றிற்கும் அவனிடம் பதில் கூறியவள் அவன் முடியை ஒரு வழி செய்தால்

சிறிது நேரம் பொறுத்தவன் வழி தாங்க முடியாமல் ஐயோ பல்லவி நா உன்ன வெறுப்பேத்த சும்மா சொன்னேன் அத நீ நம்பிட்டியா funny girl நா பொய் உன்ன அப்டி சொல்லுவேனா என்று சரணடைய

நீதானா சொல்லுவ டா இன்னும் சொல்லுவ  இதுக்கு மேலையும் சொல்லுவ உன்ன இப்டியே சும்மா விட கூடாது என்றவள் கையில் சுத்தி இருந்த சைக்கிள் சையினை வைத்து  அவன் முகம் நோக்கி குத்து விடுவது போல் காட்ட

அதற்க்கு முன்பே அவனோ கண்களை இருக்க மூடி  அய்யோ...... என்ன.... மூக்குல...... குத்திட்ட.... வழிக்குதே.....என்று கத்த ஆரம்பித்தான்

அதை பார்த்தவளுக்கு சிரிப்பு வந்தாலும் கட்டுப்படுத்திக்கொண்டு

அவன் முடியை விட்டு கைகளை கட்டிக்கொண்டு அவனை பார்க்க

கத்தி கொண்டிருந்தவன் சில வினாடிகளில்  தன்னுடைய ஒற்றை கண்ணை திறந்து பார்க்க அவள் கேக்க புக்க என்று விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருந்தாள்

சிரிப்பின் உடனே அவளோ பயம் இருக்கு குத்தவே இல்ல அதுக்குள்ள அய்யோ அம்மானு கத்துற

ம்ம்ம்ம் இந்த பயத்தை அப்டியே கண்டினியு பண்ணனும் ஓகே

அவனோ கொஞ்சம் பயத்துடன் தலை ஆட்ட அடுத்த வினாடி தன்னுடைய தலையை சரி செய்து கொண்டு கெத்தாக நிற்க

அவனை பார்த்தவள் இவ்ளோ நேரம் பயந்தவன் இப்போ என்ன பல்ல காட்றான் என்று திரும்பியவள் அங்கே கவிதா அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள்

அதை பார்த்தவள் ஒரு நமட்டு சிரிப்பு சிரித்துவிட்டு கீழ விழுந்தாலும் உனக்கு சட்டைல மண்ணு ஒட்டல ம்ம்ம்

அவனோ அவளை பார்த்து கிகிகி என்று இழித்துவிட்டு பல்லவி இங்க நடந்த விஷயம் எதையும் அவகிட்ட சொல்லாத

எத சொல்ல சொல்லுற நீ என்கிட்டே அவளை லவ் பன்றேன்னு சொன்னதைய

அத சொல்லல நீ என்ன அடிச்சத

அது நீ என்கிட்டே நடந்துகிறதா பொறுத்து

அதற்குள் கவி வந்துவிட அவனை பார்க்காமல் அவளை பார்த்து சமு இது என்ன கைல சைக்கிள் சையினை வச்சிக்கிட்டு இருக்க

இதற்க்கு பல்லவி பதில் சொல்வதர்க்குள்
எங்கையோ இருந்து  அய்யயோ.... என்று யாரோ கத்தும் குரல் கேட்டது

என் இதய வானிலே Onde histórias criam vida. Descubra agora