"பாட்டி நான் டவுன் வரை போயிட்டு வர்றேன்" என்று விட்டு தனியாக சென்றாள் ஹாஷூ
அவள் பாட்டியிடம் சொன்னதை கேட்டு கொண்டு நின்ற... ஜெய் அவளது பின்னாடியே தானும் காரில் சென்றான்
ஹாஷூ நடந்து தான் சென்றாள்...
அவளை ரசித்தவனாக ஜெய்...
கலேஜ் காலத்தில் ஹாஷூவின் அறிமுகம் பின்பூ சிறந்த நட்பு அதன் பின்பு காதல் தெரிவுப்பு" என்று கசந்த நினைவுகளை கூட ஆசையோட ரசித்தான்
"பேசாம அன்னக்கே ஒகே சொல்லி இருக்கலாம் ச்சேய்"
ஹாஷூ சில புத்தகங்களை வாங்கி கொண்டு திரும்பும் போது கார் கதவை திறந்து "ஹாஷூ ஏறிக்க" என்றான் கேஷவலாக அவளும் வீம்பின்றி ஏறி கொண்டாள்....
"தேங்க்ஸ் ஜெய்.... ரொம்ப வெயில் தலை சுத்திறுச்சி"
"என்ன கூப்டா நான் வந்து இருப்பேனே"
"நீ ஹாஸ்பிடல் போவன்னு நினைச்சேன்"
"நீ கூப்டா வராம ஹாஸ்பிடல் போவேனா ஹாஷூ"
'ஆஹா என்னமா அலையுறான்'
"ஹாஷூவா வாவ் சுப்பர் ஹாஷூன்னு என்ன யாருமே கூப்டதில்ல டேடி பாப்பான்னே கூப்டுவார்...ஸோ ஹாஷினின்னு கூப்டவும் யாருமீல்ல ஹாஷுன்னு கூப்டவும் ஆள் இல்ல"
"இனி நான் இருக்கேன்" ஹாஷூ அவனை வெறித்து பார்க்க "ஐ மீன் வீட்ல நாங்க எல்லாருமே இருக்கோமே"
"ஆமா நான் லக்கில"
"கண்டிப்பா...."
"எனக்கு ஒரூ மொபைல் வாங்கனும் ஜெய் இன்னக்கி நைட்ல என்கூட வர்றீங்களா"
"அய்யோ கண்டிப்பா உங்க கூட வர்றது தானே இனி என் வேலை..."
"ஓஹ் செக்யூரிட்டி....யா டுபாய்ல செக்யூரிட்டியோடவே இருந்துட்டு இங்க தனியா இருக்கப்ப ப்ரீடமா இருக்கு எகைன் நீங்களுமா"
"நோ செக்யூரிட்டி இல்ல நண்பன்"
"லைப் லோங் இருப்பீங்களா நண்பனா?"
"அது தெரியல"
"ஏன் தெரியல"
"பின்ன இப்ப எனக்கு உங்கள பிடிக்கும் நாளைக்கே ரொம்ப பிடிச்சா அப்பறம் நண்பனாகவே இருக்க முடியாதுல்ல"