பகுதி-25

803 37 7
                                    

கண்களை கசக்கியவளாக எழுந்து கொண்ட வித்யாவை ஹாஷூவும் அவளின் அத்தைகாரியும்  பாவமாக பார்த்தனர்

ஹாஷூ நெருங்கி சென்று கட்டி பிடித்து
"இத பார் நீ எதுக்கும் கவலை படாத டா... விது நான் இருக்கேன்ல...." என்று தடவி கொடுத்த நண்பியின் அணைப்பில் தன்னையே மறந்து கதறி அழுதாள் அவளின் இத்தனை சத்தமான அழுகை தான் ரஜீவை தன்னிலை உணர வைத்தது
உடனே எழுந்து வீட்டுக்கு சென்று விட்டான்

"என்னடா கண்ணு அழுற அதான் எல்லாம் சரியாச்சே"  என்று ஜெய்யின் தாய் கேட்டதும்

"அழுகட்டும் அத்தை அவ அழுகாம இருக்குறது தான் எனக்கு கஷ்டமாக இருக்கு" என்று கூறவும் "ஹாஷூ பார்த்துக்கோடா" என்று விட்டு  சென்று விட்டாள்....

"என்ன வித்யா நீ அநியாயம் பன்னவங்க தானே டா அழுகனும் நீ ஏன்டா அழுற"

"நீ வீடியோவ பார்த்து இருக்கனும்டி நீயாக இருந்தா செத்து இருப்ப....."  என்று விட்டு விம்மினாள்

"சரி ஒரு நாளைக்கு எத்தனை வீடியோ  இந்த மாதிரி வருது டா அதுலாம் எல்லாரும் மறந்துறுவாங்க டா"

"பட் என் கற்பு போச்சுல நான் இப்போ அசுத்தம்ல எனக்கு என் உடலே  வெறுப்பாக இருக்கு ஹாஷூ"

"சரி விடு எனக்கு உன் நண்பன் ஆகாஷ்க்கு  அப்பாக்கு அம்மாக்கு எல்லாருக்கும் உன் மேல நம்பிக்கை  இருக்குல்ல உன்ன மதிக்குறாங்கல்ல இது போதும் டா வேறு எதுவும் வேண்டாம்"

கண்களை துடைத்து  கொண்டு அவள் அணைப்பில் இருந்து பின்வாங்கி

"நான் பார்க்காத சோகமா ஹாஷூ இது ஜுஜுபில்ல"  என்று விரக்தியாக கேட்டு விட்டு
மவுனமாக வடிந்து கொண்டே இருந்த கண்ணீரை துடைத்து விட்டு மாடிக்கு ஓடி சென்று... தன் அறையினுள் புகுந்து  கொண்டாள்  

ஹாஷூ அவளை டிஸ்டப் செய்யாமலே நின்று விட்டாள்

அன்று இரவு விது பெல்கனி வந்து சோகமாக அமர்ந்து இருந்தாள் பக்கத்து மாடியில் ரஜீவ் தடுமாறிக்கொண்டு இருந்தான்

சதியே விதியாய் (முடிவுற்றது)Where stories live. Discover now