💖பகுதி-08💖

766 30 5
                                    

இரவானதும் எழுந்தான் ரஜீ  ஹாஷுக்கு கால் ட்ரை பன்னி ஆன்ஸ்வரில்லை...

உடனே ஆதிக்கும்  கால் செய்து "நாங்க தூத்துகுடி வந்துட்டோம்" என்றான்

"அப்படியா மச்சான் சரி சரி எதையும் மனசுல போட்டுக்காம. ப்ரீயா விடு காலமும் காதலும் நாங்க நினைக்கிறப்போ நமக்காக வராது"

"ஹம்.... கண்டிப்பா மச்சா நீ ஸ்ரீ லங்கா போகலையா.....?"

"டேய் அங்க அப்பாம்மா யாருமே இல்ல ஸோ உடனே போக தேவையில்ல...... அத்தைங்க யாராச்சும் கூப்டா கண்டிப்பா போயிட்டு வருவேன்"

"சரி நாளைக்கு நீயும் ஹாஷுவும் தூத்துக்குடி வர்றீங்களா...."

"இல்லடா இப்போதைக்கு கஷ்டம்..... டா ஒரு வேலைல எப்டியாச்சும்  ஜாயின் பன்னதுக்கு அப்பறமா.. வர்றேன்"

"ஏன்டா வாசு அங்கிள் கிட்ட வேலை கேட்டா என்ன....இல்லேன்னா அவர் சிபாரிசுல ட்ரை பன்னே"

"அப்போ  நான் இவ்ளோ நாள் படிச்சதுக்கான அர்த்தமில்லயே டா.... என் தகுதிக்கு கொடுக்குற வேலை தான் எனக்கு வேண்டும்"

"அப்போ வயசாகும் வரை இன்ட்ரவியூ போயிட்டே இரு.... பிகோஸ் உலகம் எப்பவோ மாறி போச்சி.... எங்கண்ணா ஒரு சி பி ஐ அவர் படிப்புக்கே தலை டா பட் அவருக்கான தகுதிக்கு  ஐந்து இயர்ஸா தேடியும் வேலை கிடைக்கல... அப்பறமா எங்க மாமாவோட சிபாரிசுக்கு அப்பறமா இப்போ தான் வேலைக்கு போறார்....."

"யாரு உன் அண்ணாவா....?"

"இல்ல என் பெரியம்மா மகனுக்கு.."

"கொஞ்ச நாள் தேடுவோம் கிடைக்கலைன்னா வாசு மாமாகிட்ட தான் போயி கேட்கனும்"

"சரி ஹாஷுவோட மொபைல்க்கு அப்பவே கால் பன்னேன் ஆன்ஸ்வரில்ல நீ உன் மொபைல அவகிட்ட கொடு"

ஆதி கொடுக்க "ஹாஷூ"

"சொல்லு ரஜீ"

"டின்னர் சாப்டியா?"

"ஆமா சாப்டேனே நீ"

"இல்ல இவ்ளோ நேரம் தூங்கினேன் இனி தான்"

"ஒகே..... வீட்டு பக்கமே வரலை"

"நாங்க தூத்துகுடி வந்துட்டோம் டி" என்றதும் கடுப்பான ஹாஷு "எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம போற அளவு நாங்க வேண்டாதவங்களா...."

சதியே விதியாய் (முடிவுற்றது)Tempat cerita menjadi hidup. Temukan sekarang