அன்று காலை வித்யாவின் மனம் சரியே இல்லை சங்கடமாகவே அவள் மனம் இருந்தது "அம்மா கோயிலுக்கு போலாமா" என்று தாயிடம் கேட்டதும்
"சரி போயிட்டு வரலாம்" என்று மகளுடன் சென்றாள் வித்யா ஒன்றும் அதிக இறைவன் பக்தி கொண்டவள் அல்ல அதற்காக இறைவன் இல்லை என்று கூறுபவளும் அல்ல எப்ப பார் கோயில் கோயில் என்று அனைத்து பிரச்சிணையையும் இறைவனின் தலையில் வைத்து விட அவளுக்கு விருப்பமில்லையோ என்னவோ
கோயில் வாசலில் அமர்ந்தபடி
"ஏன் விது ஏன்டாப்பா சோகமா இருக்க ஆதான் ரஜீவ் தம்பியையே கல்யாணம் பன்னிக்க போறியே இத விட என்ன வேணும்"
"நான்கு இயர்க்கு முன்னாடி ரஜீவ் கூட கல்யாணம்ன்னு சொல்லி இருந்தா நான் அத மட்டுமே நினைச்சிட்டு சந்தோசமாக இருந்துறுவேன் பட் இப்போ எல்லாமே மாறியாச்சி நான் தனிமைல கஷ்டப்பட்ட நாள் உண்டு காதல் தோல்வில கதறின நாள் உண்டு சொல்லி அழுக கூட ஒரு நண்பி கூட இல்லயேன்னு கவலை பட்ட நாள் உண்டு அதையும் தாண்டி ஹாஸ்பிடல் ப்ராப்ளம் ஸோ நான் இப்போ இருக்குற மனநிலைல எனக்கு கல்யாணம் தேவையான்னு தோனுதுமா.... நான் ஒன்னும் சுத்தமானவளும் இல்லயே மா என்னோட ரஜீவ் இவ்ளோ நாள் தனியாக தான் இருந்தான் பட் அவன் இன்னும் விர்ஜின் நான் அப்டில்லயேன்னு நினைக்கும் போது நான் அவனுக்கு துரோகம் பன்றேனோன்னு தோனுது"
"என்னம்மா நீ மாப்பிளைக்கு தான் தெரியுமே நடந்தது எல்லாம்"
"நடந்தது தெரிஞ்சும் அவன் என்ன ஏற்றுக்கலைன்னா அது என் ரஜீவ் கிடையாது ஏற்றுக்குவான் ஐ நோ அதான் அவன் கேரக்டர் பட் நானும் பெப்பர பேன்னு அதற்கு சம்மதம் தெரிவிச்சிடேன்".
"என்னடா நீ சின்ன பொண்ணாட்டம் அதுலாம் ஒன்னுமில்ல நீயும் கல்யாணம் பன்னிக்கனும் ரஜீவும் பன்னிக்கனும் அது யாரோ ஒருத்தர பன்ன இருவருக்கும் இஷ்டமில்லன்னா நீங்களே தான் பன்னிக்க வேண்டும் அப்பாவுக்கு ஹாஸ்பிடல் ப்ரோப்ளத்துக்கு அப்பறம் பெரும் கவலை சிரிக்க கூட மாட்டார் பட் இப்போ நிஜமாகவே சந்தோசமாக இருக்கார் அவரும் நானும் உன் கூட வாழ போறதூ கூடினா பத்து வருஷமாக தான் இருக்கும் அதுவரை அவர சந்தோசமாக வெச்சிக்கடா சந்தோசம் மட்டுமே பார்த்த என் வாழ்க்கைல முதல் முறை பணம்,மரியாதை,அந்தஸ்து,மானம் எல்லாமே போயாச்சு இப்போ இருக்குற ஒரு விஷயம் உன் கல்யாணம் அது தான் எங்க சந்தோசம் தயவு பன்னி அதிகமாக யோசிக்க வேண்டாம் அம்மு"