பின்னாடி நின்ற சந்தியாவை கண்ட ஹாஷினியின் முகம் வினாக்குறியாகியது 'இவள் கேட்டு விட்டாளா என்ன திட்ட போறாளா....'
"என்ன சந்தியா இப்போ தான் வந்தியா?"
"ஆமாக்கா..." அவள் முகம் சரியில்லை
"என்னாச்சி ஏன் டல்லா இருக்க தூங்கலையா?"
"இல்லக்கா எனக்கு ஒரு பையன் ப்ரபோஸ் பன்னிட்டான்"
"இந்த வயசுல இது ஒன்னூம் இவ்ளோ பயப்பட்ற விஷயமில்யே டா நீ ஏன் பயப்படுற?"
"அக்கா நான் சின்னதுல இருந்து தாத்தா பாட்டி மாமா அத்தைன்னு அம்மா பாசமே உணராம வளர்ந்தவ எனக்கு சாதரணமா நடக்குற எதுவுமே புரியலைக்கா.... இங்க தாத்தா காதல் என்றாளே ஏதோ கொலை குற்றம் போல் நடத்துவதால நான் எதையும் தெரிஞ்சிக்காம வளர்ந்தவ"
"புரியுது... புரியுது இப்போ என்னம்மா ஏதாச்சும் அவன் பயமுறுத்துறானா"
"அவன கல்யாணம் பன்னிக்க கட்டாயபடுத்துறான் முடியாதுன்னு சொன்னதுக்கூ நேற்று அவன் தற்கொலை முயற்ச்சி பன்னிக்கிட்டு ஹாஸ்பிடல்ல எட்மிட்டாகிட்டான்னு என் நண்பி சொன்னா பட் இப்போ ஒரு ஏழு மணி அளவுல நான் மாடில ஜன்னல் மூட்றப்ப அவன் நின்னான் ரோட்ல"
"ஹாஹ் அப்பறம்"
"நான் ஜன்னல மூடிட்டு போயி கட்டில்ல விழுந்து தூங்க போனேன் அவன் கீழ உள்ள லேன்ட் லைனுக்கு கால் பன்னிட்டான் சின்னமாமா பேசிட்டார் உடனே கட் போல திரும்ப நான் கீழே இறங்கும் போது கால் வந்துச்சி ஆன்ஸ்ர் பன்னேனா"
"பன்ன அப்பறம்"
"இப்பவே அவன கல்யாணம் பன்னிப்பேன்னு கடவுள் மேல சத்தியம் பன்னட்டுமாம் அதற்கு அப்பறம் டிஸ்டம் பன்னவே மாட்டானாம் கல்யாணம் பேசுற வயசுல வீட்டுக்கு வந்து கேட்குறானாம் அதுவரை என்ன நினைச்சிட்டே காலத்த கழிப்பானாம்"
"நீ எதுவும் பேசலையா?"
"இல்ல என்ன பேச விடாம பரபரன்னு அவன் சொல்றத சொல்லிட்டு 'இப்ப நீ உங்க வீட்டுக்கு பக்கதுல உள்ள அரசமரத்தூகிட்ட வா....' ன்னு சொல்டு கட் பன்டான்"