முற்பகல் பன்னிரண்டு மணி ஆகியும் வித்யா அறையை விட்டு வெளி வரவில்லை என்பதால் ஹாஷினி மாடிக்கு சென்று கதவு தட்டினாள் கதவு தானாகவே திறந்து கொண்டது
'லூஸு ஒரு லாக் கூட போட்டுக்காம தூங்குறாளா' என்று அவளை ஏசி கொண்டு உள்ளே வந்தவள் வித்யா நன்றாக உறங்கி கொண்டு இருப்பதை கண்டு
"விது" என்று அழைத்து பார்த்தாள் அசைவே இல்லை உடனே அருகில் சென்று தலையை தடவி "வித்யா எழுந்துறு டா" என்றாள் அன்பாக
உடனே எழுந்து கொண்டு "குட் மார்னிங் ஹாஷூ"
என்று கூறி கொண்டே கொட்டாவி ஒன்றை விட்டாள்"வாய மூடு இப்போ குட் மார்னிங்கா பன்னிரண்டு மணி என்னடி இது இவ்ளோ தூக்கம்"
"நான் ஆறு மணித்தியாலம் தான் ஹாஷூ தூங்கினேன்" என்று சீண்டும் விதமாக கூற
"அப்போ தூங்கும் போது காலை ஆறு மணியா...?"
"ஹம்" என்று கூறி விட்டு பாத்ரூமை நோக்கி ஓடி விட்டாள்
"விது பதில் சொல்லாம எஸ்கேப் ஆகிட்டதாக நினைக்காத இங்க தானே இருக்க லேட்டாக தூங்கினதுக்கான காரணம் சொல்லியே ஆகனும்" என்று கத்தினாள் பாத்ரூம் வரை கேட்க்கட்டும் என்று ஆனால் அவள் கத்திய கத்தில் பக்கத்து வீடு வரை சத்தம் சென்றடைந்தது
"நான் எங்கடி எஸ்கேப்பானேன் பாத்ரூம் வந்து திங் பன்றேன் என்ன சொல்லலாம்ன்னு"
"நடந்தத சொல்ல எதுக்குடி திங்கிங்"
"நடந்ததயோ நடக்காததயோ எத சொல்றதாக இருந்தாளும் யோசிச்சி பேசுறது தானே நல்லது"
"ஆமா பெரிய லாவ்யர் இவ டாப்பிக் டாப்பிகா நான் கேள்வி கேட்க்க போறேன் இவ பதில் சொல்ல ப்ரப்பயாரிங்கா.... ச்சே லூஸூ சரி வேக்கப் ஆகிட்டு வா ப்ரெக்பஸ்ட்ட ரெடியாக இருக்கு"
"சரி வர்றேன்" என்று விட ஹாஷூ கீழே சென்று விட்டாள்
கீழே வந்ததும் டைனிங் டேபிலில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்த வித்யாவின் அருகில் வந்து அமர்ந்தாள் ஹாஷூ