அந்த ஒவ்வொருவரினதும் சோக காலம் அப்படியே நகர்ந்தது
விது ஊரில் உள்ள ஹாஸ்பிடலுக்கே வேலைக்கு சென்றாள்.... மும்பையில் தன் பாடும் தானும் என்று யாருடனும் தொடர்பு இன்றி இருந்தாள்
ரஜீவுடன் கன்டெக்ட் வைத்தாள் அது அவனுக்கு சரியில்லை அவன் என்னை மறக்க வேண்டும் என்பதே அவள் விருப்பம்
ஜெய்யை அவளுக்கு பிடிக்கவே இல்லை அவளுடைய காதலை பிரித்தவன் என்று அவனுடன் தொடர்பே வைத்து கொள்ளவில்லை.....
ஹாஷூவுடன் பேச நினைக்காத நாளே இல்லை
ஆனால் அவளது மொபைல் நம்பர் வர்க் ஆகவே இல்லை
ஆதியுடன் இருமுறை பேசினாள் அப்போது எல்லாம் அவன் இலங்கையில் இருந்தான் போல்..
நாட்கள் நகர..... அவரவர் வேலைகள் பதமாக நடந்தது
ஜெய்க்கு சொந்த ஹாஸ்பிடல் அதில் இரூபத்தி ஐந்து சதவீதம் இலவசம்.... தான் அதுவும் பிரசவம் இலவசம் என்று முத்திரை குத்தபட்டது அவன் தன் வாழ்வில் ரொம்பவே மூவொன் ஆகி இருந்தான்...
ரஜீவ் பிஸினஸ் டெவலப்மென்ட் என்ற பெயரில் சிறிதாக ஆரம்பித்து பல கம்பேனிகளிற்கு தன் அறிவுரை பிஸினஸை எப்படி உயர்த்துவது பலப்படுத்துவது போன்றவற்றை சில நாட்களிற்கு செமினார் போன்று செய்தூ தர ஒரு கம்பெனியிடம் லட்சகணக்கான பணம் வாங்கினான்....
நிறைய தொழில் அதிபர்கள் தன் தொழிலை தன் மகனின் கையில் கொடுக்கும் முன்பு ரஜீவின் செமினாரை மகனுக்கு கொடுத்தனர்....
ரஜீவின் வாழ்க்கை பணம் நிறைந்ததாக சென்றாலும் மனம் நிறைந்ததாக தெரியவில்லை
விட்டு சென்ற வித்யாவிற்காக காத்திருந்தான்.....
காலம் கடக்க அன்று அவர்களின் காலேஜ் வாழ்வின் பிறகு மூன்று வருடம் கடந்த நிலையில் நால்வரினதும் இருபத்தி ஆறு வயதுகாலம் அது அன்று மிகவும் அடர்ந்த மழை..... யார் பேசுவதும் காதில் விழாத அளவுக்கு ஓசை காற்றும் மழையும்....