உள்ளே சென்றதும் ராணி ஓடி வந்து "அண்ணா....என்று விட்டு அதை மாற்றி மாமா எப்டி மாமா இருக்கீங்க...." என்றாள் பல வருடம் முன்னாடி இருந்த அதே ராணி போன்று
"இருக்கேன் ராணி நீ எப்டிருக்க"
"இருக்கேன் மாமா" என்று விட்டு தந்தையின் அருகில் கூட்டி சென்றாள்
கம்பீரமாக என்னை வளர்த்த என்னோட அப்பா.... இப்டி படுத்து கிடப்பது வாசுவுக்கு மிகவும் வலித்தது என் கழுத்தை பிடித்து வெளியே அனுப்பியது கூட கம்பீரமாக தானே இருந்தது.....
கண்ணீர் வடித்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்
"மாமா இது நம்ப பாப்பாவா" என்று ஹாஷூவை பார்த்து கேட்டாள் ராணி
"ஆமாம்மா இது என் மக தான்"
"அக்கா மாதிரியே இருக்கு மாமா.... ஏன் மாமா ஒரு தடவை கூட வரவே இல்ல எங்கள பார்க்க"
"உனக்கு தெரியாததா ராணி சரி....அம்மா எங்க?"
"மாடில ரூம்ல இருக்காங்க அவங்களுக்கு நடக்க முடியாதுல வீல்ச்யார்ல தான்"
"அம்மாவுக்கு என்னாச்சி?" கோவமாக பதற்றமாக என்று இன்னும் சில உணர்வுகளோடு
"அம்மாவுக்கு கால் ஸ்லிப் ஆகி மாடி படில இருந்து கீழ விழுந்து தான் நடக்க முடியாம போச்சி"
"ஏன் ராணி அம்மாவ பார்த்துக்க மாட்டியா நீ"
"நான் கல்யாணம் பன்ன நாள்ல இருந்தூ இங்க இல்ல அண்ணா இருந்தாளும் நம்ப அன்னிங்க நல்லா தான் பார்த்துகிறாங்க பட் அவங்க என்ன கெமரா வெச்சா பார்க்க முடியும்"
"சரி உனக்கு எத்தனை பசங்க?"
"ஒரு பொண்ணு ஒரு பையன் பொண்ணு இங்க தான் நீங்க ஆரம்பிச்சி வெச்சா பாடசாலைல படிச்சா; பையன் எங்க கூட இருந்தான்"
"உன் கணவன் எங்க...."
"அவர்க்கு இன்னொரு மனைவி இருக்காங்க அண்ணா அவங்களுக்கு என்ன விட வயசு அதிகம் ஏதோ உடம்புக்கு முடியாம வெளிநாட்டுல ட்ரீட்மென்ட்க்கு போயிறுக்காங்க அவரும் அவங்க கூட இருக்கார்" மிகவும் இயல்பாக.... அவளது மனவலியின் ஆழம் மிக அதிகமாக இருந்தால் கூட இந்த மாதிரி சாதரணமாக அவள் பேசியது செறுப்பால் அடித்தது போன்று தான் இருந்தது