ஹாஸ்பிடல் வெளியே சென்றவள் திரும்ப உள்ளே வந்தூ ரஜீவின் பின் பக்கம் நின்று "ரஜீவ்.சார்.." என்றாள் தயக்கமாக
கடுப்பாகி போன ரஜீ
"வித்யா ஐ ஸைட் கெட் அவுட்" என்று கர்ஜிக்க
"இல்ல சார் கார்க் கீ நான் நடந்து போய்க்கிறேன் நீங்க அப்பாவ..." என்று கூறுகியிலே
"வாட் அப்பாவா"
பதற்றத்துடன் "ஐ மீன் அப்பா சார்ர கூட்டிட்டு கார்ல வாங்க" என்றதும்
"எங்கப்பாவ கூட்டி வர எனக்கு தெரியும் நீ கார்ல போ" என்றான் திரும்பாமலே
"இல்ல பரவாயில்ல" என்று கூறி கீயை அருகில் இருந்த செயாரில் வைத்து விட்டு ஓடினாள்
அவளின் செய்கையில் அவனுக்கு எந்த இஷ்டமும் இல்லை ஆனாலும் எதுவும் பேசாது கீயை எடுத்தூ கொண்டான்
வீட்டுக்கு வழி தெரியாத வித்யா வயதான கிழவனிடம்"ரஜீவ் வீடு எங்க சார்" என்று ஒருவனிடம் கேட்க்க "எந்த ராஜீவ் வாத்தியார் பையனோடத இல்ல பக்கத்து தெரு விஸ்வாஸம் பையனா?"
'அவங்க அப்பா வாத்தியாரா இல்லாயா தெரியலையே பட் விஸ்வாஸம் இல்லயே என்ன பன்றது என்று யோசித்தவள்
"அதான் சார் ப்ரகாஷ்ன்னு ஒருத்தர் அவர் பையன்"
"அதான்ம்மா வாத்தியார் பையனான்னு கேட்டேன்"
என்று விட்டு வழியை சொல்ல கொஞ்சம் தூரம் சென்றவள் ஒரு நடுத்தர வயது மனிதரிடம் "சார் வாத்தியார் ப்ரகாஷ் சார் வீடு பக்கத்துலயா?""எந்த வாத்தியார்ம்மா...?"
"அப்போ ரஜீவ் சார் வீடு" என்று கேட்டதும்
"அட ரஜீவ் சார் வீடா அவர் வீடு பக்கத்து தெரு தான் பக்கத்துல தான் மெடம் ஆமா நீங்க அவரூக்கு""நான் அவரோட ரிலைடிவ்" என்று விட்டு அவனை கடந்தவள் 'ரஜீவ கேட்டா ப்ரகாஷ் அங்கிள தான் தெரியும்ன்னு ஒருத்தர் சொல்றார் சரின்னு அங்கிள கேட்டாக்க ரஜீவ தான் தெரியும் என்றாங்க சேய்" என்று புலம்பிக்கொண்டே வந்தவளை கண்ட ஹாஷூ