வித்யா மும்பை வந்து இன்றோடு மூன்று நாட்கள்
மூவரும் சேர்ந்து அபியின் வீட்டுக்கு செல்லும் போது பல தடவை "என்ன ம்மா எப்பவும் பாட்டி வீட்டு போறதுன்னா எவ்ளோ சந்தோச படுவ இப்ப இப்டி இருக்க?" என்று பல முறை கேட்க்க மறக்கவில்லை அதற்கு ஷ்யாமு தான் பதில் சொன்னார்மூவரும் டின்னர் சாப்பிட்டு கொண்டு இரூக்கையில் "என்ன கண்ணு வேலைக்கு எதுவும் போக ஐடியா இருக்கா இல்ல பேசாம உன் ப்ரென்ட் மாதிரி அப்பாவோட பிஸினஸ பார்த்துக்க ஐடியாவா?"
"உங்க பிஸினஸ நீங்க பார்த்துக்குறது தான்ப்பா உங்களுக்கு நல்லது கொஞ்சம் காலம் கழிச்சி நானும் பார்த்துக்குறேன்"
"அப்போ இப்போ"
"இப்போ எதாச்சும் ஹாஸ்பிடல்ல... ஜாயின் ஆகலாம்ன்னு"
"மும்பைக்கே பெரிய ஹாஸ்பிடல்ல ஜயின் பன்னஇ விடட்டா.... இல்ல சொந்தமா கட்டி தரட்டா"
"யார்கிட்டயாவது கொஞ்சம் நாள் கத்துக்கனும் டேடி"
"என் நண்பன் ஒருத்தன் இருக்கன் ப்ரேம் சிங் ன்னு ரொம்ப பெரிய வீ ஒ ஜி நீ அவன் கிட்ட ஜுனியரா இருக்கியா?"
"ஹம் சரி டேடி"
"அப்போ காலைல ரெடியாக இரு"
விடிந்ததும் ரெடியாகிய வித்யா தந்தையுடன் கிளம்பினாள்
அது மும்பையிலே பெரிய ப்ரைவெட் ஹாஸ்பிடல்
ப்ரம்மிக்கும் அழகு..... பெரிதாக __________ என்று போடப்பட்டு இருந்தது இங்க டாக்டரா இருக்குறதும் கர்வம் போல என்று நினைத்து கொண்டு காரை விட்டு இறங்கினாள்வித்யாவிற்குள் பதற்றம் உடனே தந்தையின் கையை பற்றி கொண்டாள்
"என்ன டா ராணி எதுக்கு நேர்வஸாக இருக்க டேடி இருக்கும் போது"
"இல்ல டேடி பெஸ்ட் டைம்ல அதான்"
"எப்பவும் பெஸ்ட் டைம தான் நேர்வஸில்லாம பன்ன கத்துக்கனும்"
"டேடி டாக்டர் ப்ரேம் ஜீ எங்க படிச்சார்"
"அவர் இந்தியன் ஸிடிஸன் பட் ஸ்ரீ லங்கால தான் யுனிவர்ஸிடி போனான் அப்பறம் அமேரிக்கால சில மேல் படிப்புகள படிச்சி பட்டம் வாங்கி பிறந்த நாட்டுக்கு சேவை செய்ய வந்துட்டான்"