காலம் -6

479 43 32
                                    

கண்களை திறந்த தோழிகள் ஏழ்வரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியில் இருக்கி கட்டி கொள்ள.... சபீலாஹ் டக்கென எழுந்து பார்த்தாள்.... கண்கெடர் ஏறி வந்தார்...

கண்டெக்டர் : இதான் மா கடைசி ஸ்டாப்பிங்கு...

ஹஃப்னா : என்னங்கண்ணா சொல்றீங்க.... நதிவனத்துக்கு நாங்க போகனுமே.... அதுவர போகும்னு சொல்லி தான கூட்டீட்டு வந்தீங்க...

கண்டெக்டர் : நதிவனம் இங்க இருந்து நாழு கிலோமீட்டர்ல இருக்கு மா... இவ்ளோ கிட்ட விட்டதே பெருசு...

தஸ்னி : என்னண்ணா இப்டி சொல்றீங்க...

ஓட்டுனர் : மன்னிச்சிடுங்கமா... இதுக்கு மேல என்ன சொன்னாலும் வண்டி நகராது....

அவரின் பேச்சில் ஏதோ ஒரு நடுக்கத்தை அடையாளங்கண்ட ராதினா அவரை சந்தேகமாய் பார்த்தவாறு....

ராதினா : அதுக்கு எதுக்கு இவ்ளோ பயப்புடுரீங்க....

கண்டெக்டர் : இல்லயே.. அப்டிலாம் இல்ல...

அஃப்ரின் : நடுக்கத்துலையே தெரியிது...

ஹனா : நாங்க என்ன உங்கள கடிச்சு முழுங்கவா போறோம்... சொல்லுங்களேன்...

ஓட்டுனர் : நீங்க கடிக்க மாட்டீங்க... ஆனா அது மொத்தமாவே முழுங்கீடுமே...

சஹா : என்ன சொல்றீங்க...

கண்டெக்டர் : இத பாருங்க மா... நீங்க போற நதிவனம்ங்குர ஊருக்கு பக்கத்துல இன்னோறு ஊரும் இருக்கு.... அந்த ஊருக்கு போனவங்க யாருமே உயிரோட திரும்புனதுல்ல...

ராதினா : எத்தன வர்ஷமா...

ஓட்டுனர் : இருவது வர்ஷத்துக்கு மேல இருந்தே மா...

சபீலாஹ் : அப்போ இருவது வர்ஷமா அந்த ஊர்ல உள்ளவங்க டௌனுக்கே போகாமையா வாழ்ந்துக்குட்டு வராங்க... எப்டி பாத்தாலும் மளிகை பொருளுக்காவது சரக்கு வாங்க டௌனுக்கு போகனுமே... என அதிமுக்கிய கேள்வியை முன் வைக்க....

ஓட்டுனர் : அப்டி இல்லம்மா.... சாய்ந்தரம் ஆறு மணிக்கு மேல யாரும் அங்கேந்து வரவும் மாட்டாங்க... போகவும் மாட்டாங்க...

காலத்தின் மாய மரணம்... (முடிவுற்றது)Where stories live. Discover now