காலம் - 56

451 44 149
                                    

அதன் பின் தாஹினியின் பிரேதத்தை அரசு மருத்துவமனை ஒன்றில் அனாதை பிணமாய் கொடுத்து விட்டனர்... அன்றைய காலத்தில் அபூர்வமாய் எண்ணப்பட்ட தோல் மாற்ற செயல்பாட்டிற்காய் அவள் உடலை உபயோகித்து கொண்டனர்...

இப்படி தான் சில வருடங்களின் பின் சேமித்து வைக்கப்பட்ட தாஹினியின் தோள் தீ காயம் பட்ட ராதியின் முகத்தில் வைக்கப்பட்டது...

இங்கு தமிழை பற்றி பல வதந்திகளை கிளப்பி விட்டனர்... இருந்தும் சத்ருவான் பள்ளியை ஆக்ரமிக்க நினைத்த அனைவருக்கும் முட்டு கட்டையாய் தமிழ் இறந்தும் இருந்து வந்தான்..

அவன் இரவு பகல் தூங்காமல் செய்த பல விஷயங்களினால் தொடர்ந்து பள்ளிக்கும் அதில் உள்ள மாணவர்களுக்கும் தேவையான பண உதவி இருந்து கொண்டே இருந்தது... அது சத்ருவான் குடும்பத்து நிலம் தான் என்ற அதிகாரபூர்வ பல சான்றுகளும் அடுத்தடுத்து கிடைத்து கொண்டே இருந்தது...

தமிழ் கூறியதை போல் தொழிற்சாலை கட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் அப்பள்ளியிலிருந்து இந்த இருவது வருடத்தில் அவர்களால் ஒரு துரும்பையும் அசைக்க முடியவில்லை...

இன்று வரையிலும் சத்ருவான் பள்ளிக்கு பல வழிகளில் பிரச்சனை கொடுத்திருக்கின்றனர்... எது வந்தாலும் நிலைத்து நில் என்ற தமிழின் சொல் படி அதுவும் நிமிர்த்தலாய் நிற்கிறது...

வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஆழ்ந்த அமைதியுடன் கூடிய அந்த வலி நிறம்பியிருந்தது.... வித்யா வன்யா ஹைடி ஹரித்தா நூரா ஐவரும் எதையும் ஜீரனிக்க முடியாமல் கண்ணீருடன் நின்றிருந்தனர்...

பிரபாவும் தமிழும் அனைத்தையும் நினைவு கூர்ந்ததில் இறுகி நின்றிருக்க... நமது நாயகிகள் ஆறுவரும் வாயை மூடி கொண்டு கத்தி அழுதனர்....

தமிழ் அவர்களை நிமிர்ந்து பார்க்க... ஒரு சேர அண்ணா என கதறிய ஆறுவரும் ஓடி வந்து அணைத்து கொண்டு இன்னும் அழுதனர்...

தமிழ் : குட்டிமா என குரல் தழுதழுக்க அழைத்தவனின் கண்களிலும் கண்ணீர் குளமாக... அதை உள்ளிழுத்து கட்டுப்படுத்தியவன் அவர்களை சமாதானம் செய்து அழுகையை நிறுத்தினான்...

காலத்தின் மாய மரணம்... (முடிவுற்றது)Where stories live. Discover now