காலம் - 26

482 41 87
                                    

தன் முன் ருத்ரமூர்த்தியின் அடுத்த அவதாரமாய் நின்று கொண்டிருந்த தமிழை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தது உருவம்...

இத்துனை வருடங்களில் தமிழ் இந்தளவு கோவப்பட்டு அது பார்த்ததே இல்லை... அவன் கோவத்தில் இத்துனை விகாரமாய் இருப்பான் என்பதையும் அது அறியவில்லை... அஃப்ரியை இழுத்ததற்கு இவன் இவ்வளவு கோவமாவான் என்றும் அது எதிர்பார்க்கவில்லை....

நரம்பு புடைக்க உடலில் உள்ள அத்தனை அணுவும் கோவத்தில் வெடித்து சிதற கண்களின் சிவந்த நிறத்தில் இன்னும் இரத்தம் சிவக்க... முகம் இறுக நின்றிருந்தான் தமிழ்...

அந்த நேரம் எதிர்பாரா விதமாய் ஏதோ கூவலின் ஒலி அவ்விடத்தில் நிறைந்திருந்த நிசப்தத்தையும் தமிழின் உஷ்னத்தையும் கலைத்தது...

அதை செவி சாய்த்தவனின் கோவம் மட்டுபட்டு அதிர்ச்சி வெளிவர... அக்கூவல் அருகில் நெருங்க நெருங்க உருவத்தினுள் ஏதேதோ மாற்றங்கள் ஏற்படுவது தமிழின் கண்களுக்கு அப்பட்டமாய் தெரிய ... அதை உணராது இன்னமும் அதிர்ச்சியில் தான் இருந்தது உருவம்...

அந்த கூவல் வெகு விரைவிலே அவர்களை நெருங்க.... புகை எழுப்பியவாறு அதிவேகமாய் தொலைவில் வந்து கொண்டிருந்தது தந்த நீராவி இரயில்.... அதிலிருந்து தமிழின் எதிர்பார்ப்பை பொய்யாக்காது " எங்கள காப்பாத்து தாஹினி " என்ற அலரல்கள் எழுந்து கொண்டே இருக்க.... அதில் அதிர்ச்சியிலிருந்து தெளிந்த உருவத்தின் காதுகளில் ஏதோ ரிங்காரமிட தொடங்கியது...

தமிழின் கோவம் மறைந்து பதற்றம் மேலோங்க.. ரம்பம் போல் காதின் வலியை அக்கூவல் அறுத்து கொண்டிருக்க... உருவத்தின் மாற்றங்கள் அதிகரிக்க தொடங்கியது... சத்தத்தின் வேகம் எதிர்பார்த்ததை போலவே எகிரி கொண்டே போக... உருவத்தை கண்டவன் அதிர்ந்தான்...

கருமை பூசியதை போல் ஒரு நிலையான உருவில்லாத உருவம் இப்போது வெவ்வேறு உருவங்களில் மாறி கொண்டிருந்தது... சிவந்த நிறத்தில் ஐந்தடி உயரத்தில் சற்று பூசினார் போன்ற உடலில் கண்கள் பலபலக்க அழகோவியமாய் நின்றவளை தமிழ் இமை கொட்டது பார்க்க... அடுத்த நொடி... அதே நிறத்தில் இரண்டரையடி உயரத்தில் அழகான கூந்தல் முதுகு தாண்டிட அவனை பார்த்து கண்களால் கண்ணீருடன் நின்றாள் ஒரு ஆறுவயது குழந்தை...

காலத்தின் மாய மரணம்... (முடிவுற்றது)Where stories live. Discover now